26 May 2022

விசேட தேவையுடைவர்களுக்கான வருடாந்த மாவட்ட மெய்வல்லுனர் போட்டிகள்.

SHARE

(ராஜ்)

விசேட தேவையுடைவர்களுக்கான வருடாந்த மாவட்ட மெய்வல்லுனர் போட்டிகள்.

திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடைவர்களுக்கான வருடாந்த மாவட்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று திருகோணமலை தி/ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலக சமூக சேவைகள் பிரிவு இதனை ஒழுங்கு செய்திருந்தது.

மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

விசேடதேவையுடையவர்களுடையவர்களாகிய  தங்களின்  விளையாட்டுக்போட்டியில் பங்குபற்ற கிடைத்தமையை பெரும்பாக்கியமாக கருதுகின்றேன். நீங்கள் அனைவரும் எமது சகோதரர்கள். உங்களுக்குறிய பாதுகாப்பை வழங்க வேண்டியது எம்மனைவரதும் பொறுப்பாகும். அங்கவீனர்கள் என்ற வசனத்தைக்கூட நாங்கள் உங்களை பயன்படுத்தி  அசெளகரியப்படுத்தபோவதில்லை.உங்களது திறன்களை விருத்தி செய்ய தேவையான உதவிகளை உரிய நிறுவனங்களை இணைத்து வழங்க தயாராக இருப்பதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் இதன்போது அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் விசேட தேவையுடைய ஒருவருக்கு இதன்போது சக்கர நாற்காலி ஒன்றும் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரனினின் சொந்த நிதியில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். சிறீதரன்,துறைசார் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: