21 May 2022

கட்டுரை: இரசாயன உர தட்டுப்பாட்டைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் - ஒரு கிலோ நெல்லை விற்று ஒரு கட்டி சவக்காரம் வாங்க முடியுமா ? விவசாயிகள் கேள்வி.

SHARE

இரசாயன உர தட்டுப்பாட்டைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் - ஒரு கிலோ நெல்லை விற்று ஒரு கட்டி சவக்காரம் வாங்க முடியுமா ? விவசாயிகள் கேள்வி. 

இரசாயன உரங்களை விரைவில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இதுவரையில் எவ்வித உரமும் வழங்கப்படவில்லை என  விவசாயகள் தெரிவிக்கின்றன. இரசாயன உர இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அண்மைக் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

இதனால்  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உரத் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து சேதன உரத்திற்கு மாறுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.

குறித்த தீர்மானத்திற்கு  எதிராக விவசாயிகள் கடந்த சில மாதங்களாக, இரசாயன உர இறக்குமதியை மீண்டும் தொடங்கக் கோரி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். உரப்பிரச்சினையால் தங்களின் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரசாயன உர தடையானது  நடப்பு ஆண்டில்  உணவு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. குறித்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி தற்போது கவலை வௌியிட்டுள்ளதுடன்இ இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இரசாயன உரதட்டுப்பாடு காரணமாக சோளக பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட நிபுணர்கள் கருத்து வௌியிட்டுள்ளனர். அரசாங்கத்தின் தோல்வியடைந்த கொள்கைகளால் இலங்கை விவசாயிகள் தற்போது வேறு தொழில்களுக்கு  மாறி வருகின்றனர். இலங்கையில் இரண்டு மில்லியன் விவசாயிகள் எவ்வித உதவியும் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்

உள்நாட்டில் அரிசி உற்பத்தி 20 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.உரம் விலை ஏழு மடங்கு அதிகரித்த அதேவேளை விவசாயிகளுக்கு மானியம் கிடைக்காது.  

6,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட 50 கிலோகிராம் தற்போது 45 ஆயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

 ஆர்.சுசந்த - விவசாயிகள் தொழிற்சங்கத் தலைவர்

'எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவார்கள். அப்போதும் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்துவார்கள். நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட போகின்றது. எங்களுக்கு உரத்தை வழங்குங்கள்'. 

 கே சுகதபால - விவசாயிகள் சங்கம்

'எங்கள் பகுதியில் சுமார் 3000 விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த போகமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களிடம் உரங்களோ, விவசாய இரசாயனங்களோ இல்லை. இதனால் நாட்டின் உணவு உற்பத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்தும்' 'எமக்கு தேவையான எரிபொருள் உரம் மற்றும் மாணியம் கிடைக்கும் வரையில் எமது போராட்டத்தை கைவிடமாட்டடோம்'

 ஆர்.எம்.விமலாவதி - விவசாயி

'நெல் ஒரு கிலோ தற்போது 110 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது. கடந்த ஆண்டு  55 ரூபாவிற்கே நாங்கள் வாங்கினோம். இதுவரை காலம் எங்களுடைய தேவைகளை நாங்களே பூர்தி செய்து கொண்டோம். நாங்கள் தற்போது பாரிசாவல்களுக்கு முகம் கொடுத்துள்ளோம்  ஒரு கிலோகிராம் நெல்லை விற்பனை செய்து ஒரு கட்டி சாவக்காரத்தை வாங்க முடியுமா? என அவர்கள் தெரிவிக்கின்றர்.
















SHARE

Author: verified_user

0 Comments: