25 Mar 2022

அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்று சென்றுவிடும்.

SHARE

அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்று சென்றுவிடும்.

நாட்டிலே தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது சமயல் எரிவாயு இல்லை, எரிபொருட்கள் இல்லை, உணவுத்தட்டுப்பாடு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து மக்கள்  சொல்லெணாத் துயரங்ககளை எதிர்கொண்டு வருகின்றார்கள். நான் எனது இன்றய கன்னி அமர்வுக்குக்கு வருதற்குக்கூட பெற்றோல் இல்லாமல் நான் துவிச்சக்கர வண்டியில்தான் வந்தேன்.

என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு புதிதாகப் பதவியேற்ற .வேணுராஜ் வியாழக்கிழமை(24) தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குருமண்வெளி வட்டாரத்தில் உறுப்பினராக இருந்த இளங்கோ மரணமடைந்ததையடுத்து அவரது வெற்றிடத்திற்கு அக்கட்சியைச் சேர்ந்த .வேணுராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றயதினம் தனது கன்னி அமர்வுக்காக பிரதேச சபைக்கு வருவதற்கு துசிச்சக்கர வண்டியிலேயே வருகை தந்திருந்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கiயில்

பிரதேச சபை உறுப்பினர்களாகிய எமக்கே இந்த நிலமை என்றால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்துவரும் மக்களின் நிலமை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. விவசாயிகள், மீனவர்கள், உள்ளிட்ட பலரும் எரிபொருட்கள் இல்லாமல் மிகவும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். தற்போது எரிபொருட்கள் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் மரணித்துள்ளார்கள், பஞ்சத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவிற்குக்கூட எமது மக்கள் தப்பிச் செல்கின்றார்கள்.

இலங்கையில் அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்றுதான் நாட்டின் நிமையும் சென்றுவிடும். எனவே அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். நிவாரணங்களை வழங்க முடியாத அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரச கட்சியிலிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அக்கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலமையும் ஏற்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.                    











SHARE

Author: verified_user

0 Comments: