7 Mar 2022

மகளிர் தினத்தையொட்டி அருவி பெண்கள் வலையமைப்பினால் நடாத்தப்பட்ட வர்த்தக கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும்.

SHARE

மகளிர் தினத்தையொட்டி அருவி பெண்கள் வலையமைப்பினால் நடாத்தப்பட்ட வர்த்தக கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும்.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மகளிர் தினத்தையொட்டி போட்டி நிகழ்வுகளும் வர்த்தக கண்காட்சியும் ஞாயிற்றுகிழமை  (06) திகதி ஞாயிற்றுக்கிழமைமட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

"பாராபட்சத்தை உடைத்தெறி - பெண் சமத்துவத்தை மதித்திடு'' எனும் தொணிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குறித்த  போட்டி நிகழ்வுகள் இரண்டு நாட்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரதேச மட்ட அணிகள் எல்லே மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளின் பங்குபற்றியிருந்ததுடன் அதன் இறுதி போட்டிகள் நேற்று நடைபெற்று அதற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கயிறுழுத்தல் போட்டியில் முதலாவது இடத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகளீர் அணியும் இரண்டாவது இடத்தை கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகளீர் அணியும் பெற்றுக்கொண்டதுடன் எல்லே விளையாட்டில் முதலாவது இடத்தை கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகளீர் அணியும் இரண்டாவது இடத்தை வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகளீர் அணியும் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி திருமதி.மயூரி ஜனன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இதன்போது பெண்களின் சுதந்திரத்தை சுட்டிக்காட்டும் வகையில் அதிதிகளினால் பல வர்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் .நவேஸ்வரன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணண் அகம் மனிதாபிமான வளநிலைய பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













SHARE

Author: verified_user

0 Comments: