வவுணதீவு மக்கள் வங்கி
திறப்பு விழா.
மட்டக்களப்பு வவுணதீவு மக்களின் நலன் கருதி வவுணதீவில் மக்கள் வங்கி கிளை இன்று 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலக
பிரிவில் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்களின் சேவை நலனை கருத்தில் கொண்டு இக்கிளை
இன்று திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மக்கள்
வங்கி பிராந்திய முகாமையாளர் இ.பி.ஏ.சிசிர குமார தலைமையில் இடம்பெற்ற இன்
நிகழ்வில் மக்கள் வங்கி பிரதிப் பொது முகாமையாளர் பி. எம். பிரேம்நாத்
பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக கிளையினை திறந்து வைத்தார் மட்டக்களப்பு
மக்கள் வங்கி நகர் கிளை முகாமையாளர் எம். ஆர்.பாவானந்தராஜா மற்றும் வவுணதீவு மக்கள்
வங்கி கிளை முகாமையாளர் எஸ். சதீஸ்காந்த் உட்பட திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும்
பல பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment