25 Mar 2022

அமளிதுமளிக்கு மத்தியில் நடைபெற்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 49அமர்வு.

SHARE

அமளிதுமளிக்கு மத்தியில் நடைபெற்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 49அமர்வு.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின 49வது அமர்வு வியாழக்கிழமை(24) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேசசபைச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடுவது, வீதியோ வியாபாரங்களைக் கண்ணகாணித்தல், வீதிவிபத்துக்களைத் தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், பிரதேச சபையால் விற்பனை செய்யப்படும் இயற்கை உரம், மற்றும் மண், ஆகியவற்றை மக்களுக்கு நியாய விலையில் வழங்குதல், ஒப்பந்தம் நிறவு பெற்றுள்ள ஊழியர்களின் ஒப்பந்தங்களை நீடித்தல், வீதி அபிவிருத்தி, உள்ளிட்ட பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டன.  இதனிடைய மக்கள் மீது தற்போது பொருளாதாரச் சுமை செலுத்தியுள்ள அரசுக்கு எதிராக தான் கண்டனத்தைத் தெரிவிப்பதாக பிரதித் தவிசாளர் திருமதி.கராஞ்சினி தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குருமண்வெளி வட்டாரத்தில் உறுப்பினராக இருந்த இளங்கோ மரணமடைந்ததையடுத்து அவரது வெற்றிடத்திற்கு அக்கட்சியைச் சேர்ந்த .வேணுராஜ் அவர்களும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் (சுயேட்சைக்குழு) தேத்தாத்தீவு வட்டாரத்தைச் சேர்ந்த தேவறஞ்சன் மரணமடைந்ததையடுத்து அவரது வெற்றிடத்திற்கு அக்கட்சியைச் சேர்ந்த .ரவீந்திரன் அவர்களும், இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இப்புதிய உறுப்பினர்கள் இருவரும் பிரதேச சபை தமது கன்னி அமர்வுக்கும் வரும்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மற்றும் பொருளாதாரப் பிரச்சனைக்கு இணங்க துவிச்சக்கர வண்டியில் வருகை தந்தனர். இதன்போது புதிதாக வருகை தந்த இரு உறுப்பினர்களையும் ஏனைய சக உறுப்பினர்கள் தவிசாளர் உள்ளிட்ட அரனவரும் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இன்நிலையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த இன்றயத்தினம் பதவியேற்ற புதிய உறுப்பினரான .ரவீந்திரன் அவர்கள் தனது கன்னி உரையிலேயே இச்சபை தவிசாளரை எமது கட்சி முட்டுக் கொடுத்துதான் இப்பதவிக்கு அமர்தியுள்ளது என தெரிவிகத்ததையடுத்து, ஏனைய சக உறுப்பினர்கள் எழுந்து ரவீந்திரனுடன் மிகவும் காரசாரமாகப் பேசியதனால் சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டிருந்தது. இதற்குப் பதிலழித்த தவிசாளர் ஞா.யோகநாதன் கடந்த 4 வருடகாலமாக நாம் எதுவித கட்சிபேதங்களும் அற்ற நிலையில் இச்சபையைக் கொண்டு வழிநடாத்தி வருகின்றோம் எமக்கும் எதுவித கட்சி முரண்பாடுகளும் ஏற்படவில்லை நான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இன்றே புதிதாக பதவிஏற்ற உறுப்பினர் ரவீந்திரன் தெரிவித்த கருத்து மிகவும் தவறானதுஅதற்கு அவர் மன்னிப்புக் கோரவேண்டும் இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் உரிய உறுப்பினரை ஒரு மாதம் சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தடைவிதிப்பேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏனைய உறுப்பிர்களும்ரவீந்தரன் அவர்களும்வாக்குவதாத்தில் ஈடுபட்டனர்பின்னர் தவிசாளர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து நீண்ட நேர இழுபறிக்குப் பின்னர் ஏற்கனவே இருந்த உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கு அமைவாகவே நான் இங்கு உரையாற்றினேன் என தெரிவித்துதான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோருவதாக ரவீந்திரன் கூறினார்அதன் பின்னர் சுமூகமாக சபை அமர்வு நிறைவு பெற்றது.


























SHARE

Author: verified_user

0 Comments: