4 Mar 2022

தாழமுக்கம், திருகோணமலை கரையிலிருந்து தென் கிழக்காக 220 கிலோ மீற்றர் தூரத்தில், மையம் கொண்டுள்ளது.

SHARE

தாழமுக்கம், திருகோணமலை கரையிலிருந்து தென் கிழக்காக 220 கிலோ மீற்றர் தூரத்தில், மையம் கொண்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பரப்புக்களிலும், அண்மையாக உள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பரப்புக்களிலும், விரித்தியடைந்துள்ள தாழமுக்கம், திருகோணமலை கரையிலிருந்து தென் கிழக்காக 220கிலோ மீற்றர் தூரத்தில், மையம் கொண்டிருக்கின்றது. என வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் வெள்ளிக்கிழமை(04) தெரிவித்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

குறித்த தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து, வடமேற்குத்திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாக, நகர்ந்து அடுத்த 48 மணித்தியாலங்களில், வடதமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கு, வட மத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களில், அவ்வப்போது மழை பெய்யுமென் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்,  இரத்தினபுரி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இப்பிரதேசங்களில் 50மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்தமழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியின் கரையேரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய சந்தரப்பம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களிலும், மத்தியமலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது 40தொடக்கம் 50கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்  காணப்படுகின்றது.

இந்த தாழமுக்கம் காரணமாக கடலில் பயணம் செய்வோரும், மற்றும் மீனவ சமூகமூகமும், மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு, அப்பாற்பட்ட கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல்வரை, நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு, அறிவுறுத்தப்படுகின்றார்கள். காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடகாக மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு, அப்பாற்பட்ட கடற்பரப்புக்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச்சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு, 30தொடக்கம் 40கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது 45தொடக்கம் 55கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். நாட்டைச்சூழவுள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தழிப்பாகக் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பரவலாகப் பெய்துவருகின்ற பலத்த மழை காரணமாக கிராங்களின் உள் வீதிகளில் நீர் நிரம்பியுள்ளதுடன், மக்கள் குடியிருப்புக்களுக்குள்ளும் மழை நிர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளது.

இது இவ்வாறு இருக்க பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டங்களும் உயர்ந்துள்ளன. அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம 33அடி 1அங்குலமாகவும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 7அங்குலமாகவும், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19அடியும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலமாகவும், கித்துள்வெவ குளத்தின்நீர்மட்டம் 8அடி 5அங்குலமாகவும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 6அங்குலமாகவும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலமாகவும், உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: