4 Feb 2022

கவிதாயினி தில்லையின் விடாய் கவி இலக்கியநூல் வெளியீட்டு விழா

SHARE

(ரகு)

ஆரையம்பதியின் ஆளுமைமிகு இலக்கியவுலகின் அடையாளமாக திகழும் மறுகா கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிதாயினி தில்லையின் விடாய் கவி இலக்கியநூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது

இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பினை ஆரையம்பதியின் மூத்த எழுத்தாளர் மறுகா மலர்ச்செல்வன் அவர்கள் மிகச்சிறுப்பாக முன்நின்று  வழிநடாத்தினார் இந்நிகழ்வின் தலைமையை கிழக்குப்பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்சிஸ் அவர்கள் ஏற்றிருந்தார் இந்நிகழ்வின் அதிதிகளாக பேராசிரியர் அம்மன்கிளிமுருகதாஸ் கவிஞர் வைத்தியர் மலரா புஷ்பலதா லோகநாதன் எழுத்தாளர் இந்திராணி புஷ்பலதா மற்றும் சட்டத்தரணி மங்களேஸ்வரி  சங்கர் ஆகியோர் பங்கேற்றனர் இந்நூலின் முதற்பிரதியினைடாக்டர் கே முரளிதரன் அவர்கள் பெற்றுக்கொண்டார் இந்நூலின் மீதான விமர்சன உரைகளை கவிஞர் வாசுதேவன் மற்றும் கவிஞர் த உருத்திரா ஆகியோர்  ஆழமான பெண்ணிலைவாத நோக்குடன் இலக்கிய உலகின் காத்திரமான வழிநின்று மிகச்சிறப்பாகநிகழ்த்தினர்  இந்நிகழ்வின் நன்றியுரையினை கவிஞர் சுதாகரி மணிவண்ணன் அவர்கள் நிகழ்த்தினார்.

பின்நவீனத்துவ இலக்கிய உலகில் புதிய தலைமுறைக்கான உடைப்பை நோக்கி பயணிக்கும் ஆரையம்பதியின் மறுகா கலை இலக்கிய வட்டத்தினரின் மறுமலர்ச்சிமிக்கதொரு இலக்கிய நிகழ்வாக இந்நிகழ்வு நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாயமைகின்றது.





















SHARE

Author: verified_user

0 Comments: