25 Feb 2022

வீரக்காட்டு வீதியைப் புணரமக்குமாறு வேண்டுகோள்.

SHARE

(அஸ்ஹர் இப்றாஹிம்)

வீரக்காட்டு வீதியைப் புணரமக்குமாறு வேண்டுகோள்.

நிந்தவூர்   பிரதேச சபை கட்டிடம் அமைந்துள்ள வீதியினூடாக சென்று வீரக்காடு வரை செல்லும் விவசாயிகளின் நன்மை கருதி அமைக்கப்பட்ட  புதிய வீதி கடந்த ஓரிரு தினங்களுக்குள் ஆற்று மண்ணை  ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்களால் பெரும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.


கிறவல், ஆற்றில் மண் ஏற்றுபவர்களால் ஆறு மேலும் ஆழமாக்கப்படுவதுடன் அறுவடை காலங்களில் வயல் நிலங்களுக்கு உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலமையொன்று தோன்றலாம்.

எனவே நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் விவசாய திணைக்கள அதிகாரிகளும் ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் வீதியினை சேதமாக்கிய டிப்பர் உரிமையாளரைக் கொண்டே வீதியினை செப்பனிடச் செய்யுமாறும் பிரதேச விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றளர்.

இந்த வீதியினூடாக நிந்தவூர் , சாய்ந்தமருது , கல்முனை , மாளிகைக்காடு , சம்மாந்துறை மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினசரி பயணம் செய்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: