8 Dec 2021

Online game விழிப்புணர்வு குறும்படம் - 7 ஆம் ஆண்டு மாணவனின் படைப்பு.(vedio)

SHARE

Online game விழிப்புணர்வு குறும்படம் - 7 ஆம் ஆண்டு மாணவனின் படைப்பு.

கொரானா பேரிடர் காரணத்தினால் உலகம் முழுவதும் மாணவர்கள் கல்வியினை இணைய வழியாக கற்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக அற்காலத்தில் மாணவர்கள் வீட்டில் முடங்கி இருந்து ஸ்மார்ட்போன் பாவனையினை மிக இயல்பாக பாவிக்ககூடிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலமை பெரும் சவாலானதாக பெற்றோர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் தோற்றுவித்திருந்தது. வீட்டிலே பெற்றோர்கள் இணைய வழி கல்வி முறையை கண்காணிப்பு செய்யும் முறையிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகினர்.

இணையவழி பாவனையின் ஊடாக பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகள் தவிர்ந்த நேரங்களில்   ஒண்லைன் ஊடாக விளையாட்டில் ஈடுபடுவது அதிகரிக்கப்பட்டு அது இன்னும் தொடர்வதாகவும் இனங்காணப்படுகின்றது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் Online game க்கு அடிமைப்பட்டு ஏதோ ஒரு வகையில் தமது கற்றல் செயற்பாடுகளை இடைநடுவில் கைவிட்டு கற்றலில் ஆர்வம் இல்லாமல் குடும்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டு ஒருவகையான மனச்சிக்கலுக்குள் ஆட்பட்டு தமது எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதன்மூலமாக அவர்கள் பெருமளவிலான குற்றங்களை செய்யவும் தூண்டப்படுகின்றனர். அதற்கு மேலதிகமாக பெற்றோர்களும் தமது பிள்ளையை எவ்வாறு இந்த ஒண்லைன் கேம்ஸ் இன் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்று தெரியாமலும் மிகவும் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்   மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் செட்டிபாளையத்தைச் சேர்ந்த புவிதரன் சஞ்ஜய்வன் எனும் மாணவன் தனது எழுத்து இயக்கம் நடிப்பில் குறும்படம் ஒன்றை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் 5 நிமிடம் கொண்ட இந்த குறுந்திரைப்படத்தை பார்வையிட்ட பலராலும் மாணவன் புவிதரன் சஞ்ஜய்வனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளன.












SHARE

Author: verified_user

0 Comments: