1 Nov 2021

மூதாட்டியின் வீடு வளவு பயிர்கள் காட்டு யானையால் சேதம்.

SHARE

மூதாட்டியின் வீடு வளவு பயிர்கள்  காட்டு யானையால் சேதம்.

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையை அண்டி அமைந்துள்ள ஆண்டான் குளம் கிராமத்திற்குள் உள் நுழைந்த காட்டு யானையால் தனது வீடு சேனைப்பயிர்கள் வேலிகள் என்பன சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் 60 வயதான மூதாட்டி தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஆண்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லன்  கண்ணகை 13 வயதான பேத்தியுடன் நித்திரையில் இருக்கும்போது காட்டு யானைகளின் நடமாட்டம் உணரப்பட்டதால் உடனடியாக தான் தனது பேத்தியையும் அழைத்துக் கொண்டு பாடசாலைக்குள் ஓடி ஒழிந்து கொண்டு தப்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தெய்வாதீனமாக தானும் தனது பேத்தியும் காட்டு யானைத் தாக்குதலில் இருந்து ஓடித் தப்பிவிட்ட போதிலும் பொழுது விடிந்து தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடும் வளவுக்குள் நாட்டப்பட்டிருந்த சேனைப் பயிர்களும் வேலிகளும் சேதமாக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் காட்டு யானைகளின் ஊடுருவலும் சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.







                            

SHARE

Author: verified_user

0 Comments: