18 Nov 2021

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் நந்தகோபனின் 13ஆவது நினைவேந்தல் நிகழ்வு.

SHARE

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் நந்தகோபனின் 13ஆவது நினைவேந்தல் நிகழ்வு.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர். குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்களின் 13 ஆவது நினைவேந்தல் நிகழ்வு           

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 13வது ஞாபகார்த்த தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் திங்கட்கிழமை (15) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில்  நிகழ்வுகள் இடம்பெற்றன.

கட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் நந்தகோபனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு நினைவுரைகளும், இடம்பெற்றன.

இதன்போது மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: