23 Oct 2021

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி மனைப் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பு திட்டம் வழங்கிவைப்பு.

SHARE

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி மனைப் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பு திட்டம் வழங்கிவைப்பு.

இரண்டு இலட்சம் மனைப் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு மகிழவட்டவான் கிராமத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை(22) இடம்பெற்றது. மகிழவட்டவான் கிராம சேவகர் பிரிவிலிருந்து மேற்படி மனைப் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 12 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு அதற்கு, கோழிக் கூடு அமைத்து கொடுத்ததுடன் ஐம்பது கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டது.

இப்பிரிவிலிருந்து வெள்ளிக்கிழமை 45 நாள் வயதுடைய  600 கோழிக் குஞ்சுகளுக்கு நேய்நோய் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டு 12 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி ஆர். சுபாசுகி,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வீ. கலைச்செல்வி, சமுர்த்தி திட்ட முகாமையாளர் எம். தமயந்தி, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பரம்சோதிநாதன் மற்றும் கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





 

SHARE

Author: verified_user

0 Comments: