10 Oct 2021

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் வாழ்வாதாரமும் உணவு நிலைபேறு திட்ட ம் முன்னெடுப்பு.

SHARE

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் வாழ்வாதாரமும் உணவு நிலைபேறு  திட்ட ம் முன்னெடுப்பு.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் வாழ்வாதாரமும் உணவு நிலைபேறு எனும் திட்டத்தின் கீழ் விவசாய பெண்களை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் வெருகல் குச்சவெளி, மொரவௌ ஆகிய பிரதேச செயலகங்களிலும் மற்றும் வாகரை பிரதேசத்திலும் இச்செயற்திட்டம் நடைபெற்று வருகின்றது.

இதனூடாக இயற்கைமுறையான விவசாய செய்கையினை ஊக்குவிப்பதுடன் விதை தானியங்களை சேமித்து எதிர்காலத்தில் பாரம்பரிய முறையினை ஊக்குவிப்பதுடன் நோயற்ற சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் சனிக்கிழமை  (09) பேரமடுவ கிராமத்தின் அரலிய பெண்கள் விவசாய குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கைமுறை விவசாய செய்கையின் ஊடாக அக்கிராம மக்களின் நிலையான வாழ்வாதாரத்தையும் பாரம்பரிய உணவு தேவையையும் பூர்த்தி செய்யும் பொருட்டு விசாய கிணறு மற்றும் பாரம்பரிய விதை தானியங்கள் வழங்கிவைக்கப்பட்டு விதைப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது இவ்விவசாய வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் இரு பெண்களுக்கான துவிச்சக்கரவண்டியும் ஏனைய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சேனைப்பயிர்செய்கையில் ஈடுபடும் 16 பெண்களை கொண்ட இரு குழுக்களுக்கான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் ஏனைய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகொரல, அகம் மனிதாபிமான வள நிலைய இணைப்பாளர் க.லவகுசராசா, கந்தளாய் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், அரலிய விவசாய பெண்கள் குழுவின் அங்கத்தவர்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் விவசாய பெண்கள் கலந்து கொண்டனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: