14 Oct 2021

திருகோணமலை மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக பொறியலாளர் செந்தூரன் பதவி உயர்வு.

SHARE

திருகோணமலை மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக பொறியலாளர் செந்தூரன் பதவி உயர்வு.

திருகோணமலை மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக பொறியலாளர் கு.செந்தூரன் பதவி உயர்வு பெற்று திருகோணமலையில்ல அமைத்துள்ள அலுவலகத்தில் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை கடந்த செவ்வாய்கிழமை (12) பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலையே குறித்த பதவி உயர்வானது பிரத செயலளரினால் வழங்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் முதலாவது நியமனத்தினை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமான கிளிநொச்சி பிரதேச நீர்பாச பொறியலாக நியமிக்கப்பட்டு நான்கு வருடங்களும் அதன்பின்னர் , முல்லைத்தீவு பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளராக நியமிக்கப்பட்டு அப்பிரதேசத்தில் நான்கு வருடங்களும் கடமையாற்றியிருந்தார் இவர் கடமையாற்றிய இரு மாவட்டங்களிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்பட்ட குளங்களை புனரமைப்பதில் முன்னின்று உழைத்திருந்ததுடன் இரணைமடுக் குளம் உட்பட பரிய குளங்களை புனரமைத்ததுடன் சூரிய சக்தியில் இயங்கும் ஏற்று நீர்ப்பாசன திட்டத்தினை முதலில் ஆரம்பித்தமை பெருமை இவரைச்சரும்.  

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன அபிவிருத்திக்கு உதவியதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக களுதாவளையில் தூர்ந்துபோய் கிடந்த ஏற்று நீர்பாசனத்தை சூரிய சக்தியில் இயங்கவைத்த பெருமை இவரையே சாரும் இவ்வாறான இவரின் சேவையால் விவசாயிகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் பெற்று விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: