10 Oct 2021

ஆனந்தகிரி அறப்பணிசபையின் ஏற்பாட்டில் வசதிகுறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

SHARE

ஆனந்தகிரி அறப்பணிசபையின் ஏற்பாட்டில் வசதிகுறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கித்துள் - ராஜபுரம் கிராமத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட  ஒரு தொகுதி வசதிகுறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 10.10.2021 ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் ராஜபுரம் கிராம அபிவிருத்தி சங்ககட்டிட முன்றலில்  ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் திரு.லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்றது.

ஆனந்தகிரி அறப்பணிசபையின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ்  இடம்பெற்ற இந்நிகழ்வில்  ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான ச.சிவலிங்கம், செயலாளர். நே.பிருந்தாபன், உபதலைவர் இ.மதிராஜ், இணைப்பாளர்களான க.செந்தூரன், திரு.நே.ஜனார்த்தனன், ம.புவிதரன் மற்றும் ராஜபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கான அனுசரணையினை மட்டக்களப்பு - குருக்கள்மடத்தை சேர்ந்த அமரத்துவம் அடைந்த திருமதி. மகேஸ்வரி அருளானந்தம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையானது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக தனது பணியினை விரிவுபடுத்தி கல்வி அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள், வறுமை ஒழிப்பு, இயற்கையை நேசித்தல், கலை கலாசார நிகழ்வுகளை நடாத்துதல் முதலான  செய்றிட்டங்களை மாதம் ஒரு செயற்றிட்டம் எனும் அடிப்படையில்  முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
























SHARE

Author: verified_user

0 Comments: