25 Aug 2021

களுவாஞ்சிகுடிக்கு வந்துள்ள காட்டு யானைகள்.

SHARE

களுவாஞ்சிகுடிக்கு வந்துள்ள காட்டு யானைகள்.

மட்டக்களப்பு மாவாட்டத்தில் இதுவரைகாலமும் படுவாங்கரைப் பகுதியை துவம்சம் செய்து வந்த காட்டுயானைகள் தற்போது மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் பகுதிக்கு வந்துள்ளது.

செவ்வாய்கிழமை(24) இவ்வாறு 4 காட்டு யானைகள் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து களுவாஞ்சிகுடிப் பகுதிக்கு வந்துள்ளன. தற்போது ஆற்றங்கரையோரமுள்ள பற்றைகளுக்குள் அந்த 4 காட்டு யானைகளும், நிற்பதனால்  அப்பகுதி மக்களும் அச்சம் கொண்டுள்ளனர்.

படுவாங்கரைப் பகுதியில் மாலை வேளைகளில் கிராமங்களுக்குள் உட்புகுந்து மக்களையும், பயிர்களையும், வீடுகளையும், அழித்து வருவது போன்று   களுவாஞ்சிகுடி ஆற்றங்கரையோரம் இவ்வாறு நிற்கும் யானைக்கூட்டம் மாலை வேளையாகியதும், நகர்ப்பகுதிக்குள் உள்வரலாம் என்ற அச்சம் மக்கள் மத்தில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் இவ்வாறு மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து நகர்ப்பகுதிக்கு காட்டுயானைகள் ஊடுருவியுள்ளமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வெல்லாவெளி சுற்றுவட்டாரக் காரியாலய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்விடையம் தொடர்பில் தாம் ஸ்த்தலத்திலற்கு உடன் விரைந்து நிலமையை அவதானிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.











                                                                                       


SHARE

Author: verified_user

0 Comments: