24 Aug 2021

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் மக்கள் அல்லோலகல்லோலம். வாழ்வாதாரப் பயிர்கள் நாசம்.

SHARE

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் மக்கள் அல்லோலகல்லோலம். வாழ்வாதாரப் பயிர்கள் நாசம்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின்  பாலையடிவட்டை, நெல்லிக்காடு, உள்ளிடட்ட பல கிராமங்களுக்கு சனிக்கிழமை(21) நள்ளிரவு புகுந்த காட்டுயானைகளினால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தையும், சிரமங்களையும், எதிர்கொண்டதாக அப்பகுதி மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை(21) நள்ளிரவு நெல்லிக்காடு கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை அக்கிராம்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக மேற்கொண்டிருந்த மிகவும் பழமை வாய்ந்த பயன்தரும் 10 இற்கு மேற்பட்ட தென்னைமரங்களையும், மற்றும் வாழை, கரும்பு, போன்றவற்றை அழித்துள்ளதுடன், மரவள்ளித் தோட்டத்தையும் அழித்து துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

அப்பகுதியிலுள்ள தளவாய் காட்டில் தரித்து நிற்கும் காட்டுயானைகள் இரவாகியதும், கிராமங்களுக்குள் கூட்டம் கூட்டமாக வந்து மக்கள் குடியிருப்புக்களிலுள்ள பயன்தரும் தென்னை, வாழை, கரும்பு, மரவள்ளி, உள்ளிட்ட பயிர்களை அழித்து துவம்சம் செய்துவிட்டுச் செல்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சனிக்கிழமை கிராமாங்களுக்குள் புகுந்த 8 இற்கு மேற்பட்ட யானைக்கூட்டம் பயிர்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு ஞாளிற்றுக்கிழமை(22) அதிகாலை 4 மணியளவில்தான் கிராமத்தை விட்டு ஒருவாறு நகர்ந்ததாகவும், இதனாள் அங்குள்ள மக்கள் மிகுந்த அல்லோலகல்லோலப்பட்டதாகவும், அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின படுவாங்கரைப் பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அதிகரித்தவண்ணம் உள்ளன. காட்டுயானைகளிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகவேண்டி மின்சார வேலி அமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அது இன்றுவரை அப்பகுதி அம்மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.      

















  

SHARE

Author: verified_user

0 Comments: