15 Jul 2021

தும்பு உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு.

SHARE

தும்பு உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு.

உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் தும்பு உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் சௌபாக்கியா கடன் உதவி, நீர் இறைக்கும் இயந்திரங்கள்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் தொடர்பாகவும் சுயபொருளாதாரத்தினை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பல வேலைத்திட்டங்களை சமீப காலமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்து வருகின்றார்.

இதற்கமைய புதன்கிழமை(14) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட வாழைச்சேனை நாசிவன் தீவு கிராமத்திலும் தும்பு உற்பத்தியில் ஆர்வம் உள்ளவர்கள் அதிகமாக காணப்படுவதனால் தும்பு உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல்லினை நட்டு அதன் வேலைகளையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, கோறளைப்பற்று பிரதேசசெயலாளர் கோ.தனபாலன் பிரதேசதிட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் கோறளைப்பற்று தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: