14 Jul 2021

காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தினால் சுமார் 8 கோடி நிவாரணம்.

SHARE

காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தினால் சுமார் 8 கோடி நிவாரணம்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் 10000  ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

7630 குடும்பங்களுக்கு இந்நிவாரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.இதற்கென அரசாங்கம் 7 கோடியே 63 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எம் உதயசிறீதர் தெரிவித்தார்.

முதல் கட்டத்தில் 5000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டத்திலும் 5000 ரூபாய் பெறுமதியான நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

முடக்கப்பட்ட 8  கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்காக இந்நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின் வழிகாட்டலில் கிராம உத்தியோதத்தர்களினால் குறித்த கிராமங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் வினியோகம் இடம்பெற்று வருவது றிப்பிடத்தக்கது.




 

SHARE

Author: verified_user

0 Comments: