25 Apr 2021

முகக் கவசம் அணியாத பலர் மட்டக்களப்பில் பொலிசாரினால் மடக்கிப்பிடிப்பு விபரங்களும் சேகரிப்பு.

SHARE

முகக் கவசம் அணியாத பலர் மட்டக்களப்பில் பொலிசாரினால் மடக்கிப்பிடிப்பு விபரங்களும் சேகரிப்பு.

கொரோனா தாக்கத்தின் மூன்றாம் அலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாகப் பரவி வருவதையடுத்து முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணம் செய்த பலர் ஞாயிற்றுக்கிழமை (25) பொலிசாரானால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையில் இச்சுற்றி வளைப்பு கல்லடி பாலத்தடியில் இடம்பெற்றது.

பஸ்கள் மோட்டார் சைக்கிள்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு முகக் கவசம் அணியாதோர் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களது தேசிய அடைடை இலக்கம் உட்பட முழுமையான விபரங்களும் சேகரிக்கப்பட்டன.

முகக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் பொலிசார் பொது மக்களுக்கு விளக்கமளித்தனர்.கொரோ தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.சாந்தகுமார் உட்பட பெருமளவு பொலிசார் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.







 

SHARE

Author: verified_user

0 Comments: