11 Apr 2021

அரசியல் அமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி சனிக்கிழமை உண்ணா நோன்பும் வழிபாடும் .

SHARE

அரசியல் அமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி  சனிக்கிழமை உண்ணா நோன்பும் வழிபாடும்.

அரசியல் அமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி  சனிக்கிழமை (10)  உண்ணா நோன்பும் வழிபாடும் நிகழ்வு மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐய்யனார் ஆலய முன்றலில் சனிக்கிழமை(10) நடைபெற்றது.

சிவசேனை அமைப்பின் மட்டக்களப்புக் கிளை இணைப்பாளர் எஸ்.சுதர்சனனின் ஏற்பாட்டில் இவ்வுண்ணா நோன்பு நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இதன்போது இன்றயத்தினம் இலங்கையில் 18 இடங்களில் இவ்வாறான உண்ணா விரத நிகழ்வு இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது பாம்பையும் வேம்பையும் வழிபட்டோம். கல்லையும் மண்ணயும் போற்றினோம். சூரியனையும் சந்திரனையும் கணக்கு எடுத்தோம். நீரையும் வானத்தையும் தொழுதோம். சிவனாகவே யாவும் தெரிந்தன.

புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை சைவர்கள் கோருகிறோம் என சிவசேனை அமைப்பின் மறவன்புலவு . சச்சிதானந்தன் வெள்ளிக்கிழமை (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…..

இலங்கை மண் எங்கள் மண். ஒவ்வொரு துகளை, குறுணியை, பரலை வழிபட்டோம். இயற்கை எங்கள் ஆசிரியர். பட்டறிவு எங்கள் வளர்ச்சி. தீயன களைந்தோம். நல்லன வளர்த்தோம். செதுக்கினோம் செதுக்கினோம். கூர்மையாக்கினோம். சமூகத்தைச் செதுக்கினோம் பண்பாட்டைச் செதுக்கினோம். சைவத் தமிழர்களாகத் திளைக்கிறோம்.

இந்தச் செதுக்கலின் பேறே தவத்திரு விபுலானந்த அடிகளார். இந்த வளர்ச்சியின் விளைவே தவத்திரு விபுலானந்த அடிகளார். இச் சமூகக் கூர்மையாக்கலின் படையலே தவத்திரு விபுலானந்த அடிகளார்.

இலங்கையின் மனித வரலாறு கற்காலம் முதலானது. இரும்புக் காலம் ஊடானது. பெருங்கற்காலம் தொடரானது. வரலாற்றின் ஊடாகச் செதுக்கினோம். செதுக்கிக் கூர்மையாக்கினோம். சைவசமயப் பண்பாடாக்கினோம்.

இலங்கைத் தொல்லியலார் தோண்டத் தோண்டக் கிடைப்பன யாவும் மனித வாழ்வுக்குச் சைவமும் தமிழும் ஈந்த எச்சங்கள். விபுலானந்த அடிகளாரை உருவாக்கிய கூறுகள்.

புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வருகிறார். மாணிக்கக் கங்கைக் கரையிலே முருகனைப் போற்றிய தைப்பூச நாளில் கால் வைக்கிறார்.

முருக வழிபாட்டிற்காக இலங்கை முழுவதும் இருந்து அங்கே கள் திரண்டு இருந்தார்கள். மகாவம்சமும் கூறுகிறது. இலங்கையில் புத்தர் சந்தித்த பண்பாடு சைவத் தமிழ்ப் பண்பாடு. அசோகனின் தூதர் அநுராதபுர அரண்மனைக்கு வந்தனர். சைவத் தமிழன் மூத்த சிவனின் மகன் ஆட்சிக் காலத்தில் வந்தனர். நாக நாட்டில், அநுராதபுரத்தில், களனியில், உரோகணத்தில் சைவத் தமிழர் அரசுகள் ஆட்சிகள். மகாவம்சமும் இதையே கூறும். இலங்கை மண்ணில் இலங்கை மக்கள் உருவாக்கிய வாழ்வு முறை, சமூக கட்டமைப்பு, பண்பாட்டுக் கோலங்கள், தத்துவ உசாவல்கள், வழிபாட்டுமுறைகள் இந்த மண்ணிற்கே உரித்தானவை.

புத்த சமயத்தவர் இந்த மண்ணின் மரபுகளை ஏற்றுக்கொண்டனர். புத்த தத்துவம் கயாவில் இருந்து வந்தாலும் இலங்கை மண்ணின் சைவத் தத்துவத்தோடு இணைந்தது. கடந்த 2500 ஆண்டுகளாகச் சைவ சமயத்தை ஏற்று வாழ்ந்து வருகின்றனர். புத்த விகாரைகளில், புத்தர்களின் இல்லங்களில், புத்தர்களின் உள்ளங்களில் போதனைக்குப் புத்த சமயம், சாதனைக்குச் சைவ சமயம். சைவக் கோயில்கள் சாத்தானின் வாழ்விடங்கள். புத்த விகாரங்கள் சாத்தானின் வாழ்விடங்கள். உருவவழிபாடு உடைக்கவேண்டியது, நீக்கவேண்டியது. சொல்பவர்கள் இந்த மண்ணில் விளைந்தவர்கள் அல்லர். பாலைவனத்தில் முகிழ்த்த, பாலைவன மக்களுக்காக அமைந்த, கொள்கைகளை, கருத்தியலை இந்த மண்ணில் திணித்துப் புகுத்த விரும்புவர்கள்.

கொட்டாஞ்சேனை 1883, அநுராதபுரம் 1903, கம்பளை கண்டி 1915 எனத் தொடர்ந்தன. இசுபுல்லா சொல்கிறார் (2016) அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி ஒடட்டமாவடிக் காளி கோயிலை இடித்தேன் என. திருக்கேதீச்சர வளைவை (2019) இடித்ததாகக் குற்ற உசாவல் கத்தோலிக்கப் பாதிரியர் மாரக்கசு மீது.

இருக்கின்ற சட்டங்களைப் பயனுறுத்துவர். சமூகக் கட்டமைப்பைப் பயனுறுத்துவர். சைவர்களை, தமிழர்களை அழித்தொழிக்கப் பயனுறுத்துவர். சைவ வழிபாட்டிடங்களை உடைக்க, இடிக்கத் தொடர்ந்து முனைபவர். பாலைவனத்தில் அரியதானசின்னஞ்சிறு பசுஞ்சோலையின்கருத்தியலே ஆபிரகாமிய சமயங்கள். இலங்கை மண்ணோ பரந்த பசுஞ்சோலைக்குள் பொட்டலாகப் பாலை நிலங்கள். ளுஎதிர் எதிர் புவியியல் நிலை. பாலைவன நாட்டுக் கருத்தியல் பசுஞ்சோலை நாட்டிற்கு வேண்டுமா?

சோலைக்குள் முகிழ்த்த சைவ சமயத்தைக் காக்கவேண்டும். இந்த மண்ணின் மரபுகளைப் பேணவேண்டும். இந்த மண்ணுக்கே உரித்தான பண்பாட்டை வளர்க்க வேண்டும். சைவசமயம் இந்த மண்ணில் வாழ வேண்டும். எனவே கோருகிறோம்.

புதிய அரசியலமைப்பில் சைவத்துக்கு முன்னுரிமை கொடுக்க. புதிய அரசியலமைப்புள் மதமாற்றத் தடைகளை விதிகளைக்குக. புதிய அரசியலமைப்புள் மாடு வெட்டத் தடையை விதிகளாக்குக. என அதில் குறிப்பிட்டப் பட்டுள்ளது.   என துண்டுப்பரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.








SHARE

Author: verified_user

0 Comments: