31 Mar 2021

விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

SHARE

விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் செவ்வாயக்கிழமை (30) ஆரம்பமாகியது.

இந் நிகழ்வுக்கு ஆத்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஸன் சுவாமி ஸ்ரீமத் நீலமகாதேவானந்த மகராஜ் அவர்களும், பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் க.கருணாகரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களும், உயர் கற்கை நிறுவன பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன் அவர்களும்,  மற்றும் ஏனைய கல்லூரியின் பங்குதார நிறுவனத் தலைவர்கள், கல்லூரி பணியாளர்கள், பயிலுனர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஒரு அமைப்பு தொடர்ச்சியான வளர்ச்சியினை பெறுவதாயின் அதன் கொள்கைகளை சரியான முறையில் பற்றிக்கொள்வது தான் சிறந்த வழி அதன் அடிப்படையிலே இந்த கல்லூரியூம் செயற்படுகின்றது . பயிற்சியூடன் சேர்த்து பயிலுனர்கள் தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்வதோடு, ஆன்மீக சிந்தனைகளையூம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான அவசியத்தையூம் உணர்ந்துகொள்ள வேண்டும் என   ஆத்மீக அதிதியாக கலந்துகொண்ட சுவாமி ஸ்ரீமத் நீலமகாதேவானந்த மகராஜ் அவர்கள் தெரிவித்தார்.

விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியானது 2012 இல் அனைவருக்குமான கணினி அறிவூ என்ற நோக்கில் ஆரம்பிக்க்பட்டாலும் காலத்தின் தேவைகருதி தொழில்வாய்ப்பினை பெறத்தக்க தொழில்நுட்ப பயிற்சிகளை ஆரம்பித்ததோடு, மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவில் தரமுகாமைத்துவ முறைமை ஸ்தாபிக்கப்பட்ட கல்லூரியாக பல NVQ பயிற்சிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.  தற்போது இலங்கை மன்றத்தின் ஊடாக LINCOLN பல்கலைக்கழகத்தின் உயர் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வகையிலான அங்கீகாரத்pனைப் பெற்றது முக்கிய மைக்கல். இன்றைய இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கணினி, காசாளர், தையல் போன்ற NVQ சான்றிதழ்களும் ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிப்பயிற்சிகளும் சேர்த்து 235 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என  இந்த சான்றிதழ் வழங்கல் நிகழ்வில்  அக்கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்கலைக்கழகம், இசை நடனகல்லூரி, தொழில் நுட்பக்கல்லூரி என்ற அரசின் உயர்கற்கை நிறுவனங்கள் இருந்தபோதிலும், விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியூம் காலத்தின் தேவைக்கேற்ப பல மாணவர்களிற்கு பயிற்சியளித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றது. அத்தோடு, போட்டிபோட்டு வளர்கின்ற இந்த யூகத்திலே முன்னேற வேண்டும் என்றால் எமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறு சிறப்பாக நடாத்தப்படுகின்ற இது போன்ற விழாவிற்கு கல்வி அமைச்சின் செயலாளர்கள், அல்லது மாகாண மட்ட கல்வி சம்பந்தப்பட்ட அமைச்சு செயலாளர்களை அழைத்து இதுபோன்ற விழாவினை சிறப்பிக்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தொழில்பயிற்சி மட்டும் இன்றி பல்வேறு சமூகம் சார்ந்த செயற்பாடுகளையூம் கல்லூரி மேற்கொண்டு வருகின்றது.  கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது பாதிக்கப்ட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்கி வைத்தனர். இதன் மூலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் இணைந்து பாரிய உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என பிரதேச செயலாளர் அவர்கள் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மாணவர்களினால் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக நிகழ்வகளும், நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்வூகளும் நடைபெற்றன. இந்த கலை நிகழ்வூகள் மாணவர்களின் திறமையினை பறைசாற்றுவதாகவூம், சிறப்பான முறையில் நிகழ்வுகள் சிறந்த முறையில் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.























SHARE

Author: verified_user

0 Comments: