29 Mar 2021

கிழக்கில் நன்னீர் மீன் உற்பத்தி அதிகரிப்பு தடாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மீன் அறுவடை.

SHARE

கிழக்கில் நன்னீர் மீன் உற்பத்தி அதிகரிப்பு தடாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மீன் அறுவடை.

கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன் உற்பத்தி நடவடிக்கைககள் அதிகரிக்கப்கட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கீச்சான் பள்ளம் பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் தடாக மீன் வளர்ப்பு திட்டத்தினை கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன் பிடி அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்ம ராஜா தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண மீன்பிடி பிரிவின் உதவியுடன் மேற் கொள்ளப்பட்டு வரும் அஸ்ரப் மீன் பண்னையை பார்வையிட்டனர். இதன் போது தடாக மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் அஸ்ரப் மீன் பண்னையில் உற்பத்தி செய்யப்பட்ட மீன் அறுவடை நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன் பிடி அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்ம ராஜா, மாகாண மீன் பிடி பிரிவின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் டி.தயானந்தன், மீன் பிடி பிரிவின் மாவட்ட உத்தியோகத்தர் எல்.பிரதீபன் உட்பட மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண மீன் பிடி பிரிவின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அஸ்ரப் மீன் பண்னையில் உற்பத்தி செய்யப்பட்ட மீன் அறுவடை செய்யப்பட்டதுடன் விற்பணை நடடிவக்கையும் ஆரம்பிக்கப்பட்டன. நண்ணீர் மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தடாக மீன் வளர்ப்பு திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கி இவ்வாறான கிழக்கு மாகாணத்தில் தடாக மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மாகாண மீன் பிடி பிரிவின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: