31 Mar 2021

ரஜ வாசல திட்டத்தின் கீழ் மட்டக்களப்பிற்கு பல்கடைத் தொகுதி.

SHARE

ரஜ வாசல திட்டத்தின் கீழ் மட்டக்களப்பிற்கு பல்கடைத் தொகுதி.

மட்டக்களப்பு கள்ளியங்காடு உணவு திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு திருத்தி கையளிக்கப்பட்டிருந்தது. இக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்த்தன அவர்கள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் மூன்றாவது கட்டிடத்தை மீள புனரமைப்பு செய்து அதை ரஜ வாசல திட்டத்தின் கீழ் பல்கடைத் தொகுதி ஒன்றினை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அதனடிப்படையில் மூன்றாவது கட்டிடத்தை மீள புனரமைப்பு செய்து அதை ரஜ வாசல திட்டத்தின் கீழ் பல்கடைத் தொகுதி ஒன்றினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை 31.03.2021  வர்த்தக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்த்தன தலைமையில் அவரது அமைச்சு காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தை சேர்ந்த முகாமையாளர் எந்திரி. ரகுராமன் அவர்கள் குறித்த கட்டிடம் தொடர்பான வடிவமைப்பு அதன் மதிப்பீடும் பற்றிய விளக்கத்தை வழங்கியதுடன் வர்த்தக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்த்தன அவர்களது பார்வைக்கு முன்வைத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், உணவு ஆணைக்குழுவின் தவிசாளர், அரச வர்த்தக ஆணைக்குழுவின் தவிசாளர், மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பணிப்பின் பேரில் அசாத் மௌலானா மற்றும் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் ரஜ வாசல திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான மதிப்பீடும் வடிவமைப்பு பற்றிய விடயமும் கலந்துரையாடப்பட்டு எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.





 

SHARE

Author: verified_user

0 Comments: