5 Mar 2021

கைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வு.

SHARE

கைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வு.

ஜனாபதிதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின்நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு”  எனும் கொள்கைப் பிரகடனத்தின்கீழ் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கைத்தறி நெசவு உற்பத்தி கிராமம் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை(05) மாலை மட்டக்களப்பு எருவில் தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிற்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் உப தலைவர் பரமசிவம் சந்திரகுமார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், மற்றும், அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள், கைத்தறி நெசவு உற்பத்தியாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாபதிதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின்நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு  எனும் கொள்கைப் பிரகடனத்தின்கீழ் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கைத்தறி நெசவு உற்பத்தி கிராமம் பெயர்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு, கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளும், கருத்துக்களையும் தெரிவித்ததோடு, கைத்தறி நெசவு உற்பத்தி ஆடைகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டன.





















SHARE

Author: verified_user

0 Comments: