5 Mar 2021

கிரான் பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

SHARE

கிரான் பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

கிரான் பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் புதன்கிழமை(04) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பல அபிவிருத்தி சார்ந்த விடையங்கள் ஆராயப்பட்டன.

இதன்போது விசேடமாக உற்பத்தி கிராமங்களை உருவாக்குதல் இதன் மூலம் ஆடு, மாடு, கோழி, மீன் பிடி போன்றவற்றை விருத்தி செய்தல், கால்நடைகள் கடத்தப்படுதல் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தல், கால்நடை வைத்தியத்தை வினைத்திறனுன் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தல்.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 5000 குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 10 குளங்களை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் 2021 ஆம் ஆண்டிற்குள் முந்தனாச்சியன் மடு, மாவட்டவான் அணைக்கட்டு, பேரில்லாவெளிக்குளம், போன்றவற்றை  கட்டி முடித்தல். இதன் மூலம் விவசாய காணிகளுக்கு தேவையான நீரினை தங்கு தடை இன்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல்..

மேலும் விவசாயிகளுக்கு சேதன மற்றும் கூட்டு பசளைகளை தயாரிப்பதற்கான பயிற்சி திட்டங்களை வளங்குதல், சட்டவிரோத மண் அகழ்வுகளை கட்டுப்படுத்தல், யானைத்தாக்கத்தினை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

அத்துடன் நன்னீர் மீன்பிடி ஊக்குவிப்பு மற்றும் கண்டல் தாவரங்களை பாதுகாத்தல், அருகிவரும் நன்னீர் மீன் இனங்களை பாதுகாத்தல், சட்டவிரோத மீன்பிடி வலைகளின் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விடயங்கள்,

தொழில் முயற்சியாளர்களினதும், வெளிநாட்டு முதலீட்டாளர்களினதும் தொளில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக பயன்படுத்தப்படாத அரச காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளித்து தொழில் முயற்சிகளை ஊக்குவித்து இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல்.

போன்ற விசேட விடயங்களுடன் வழமையான பல அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் மற்றும் இரா.சாணக்கியன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு உட்பட ஏனைய பல அரச அதிகாரிகளும், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: