9 Feb 2021

சந்தேகத்திற்கிடமான முறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறந்த சிசுவின் சடலம் நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுப்பு.

SHARE

சந்தேகத்திற்கிடமான முறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறந்த சிசுவின் சடலம் நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுப்பு.

சந்தேகத்திற்கிடமான முறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறந்த சிசுவின் சடலம் நீதிமன்ற உத்திரவின் பேரில்  திங்கட்கிழமை(08) மாலை தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த 2ம் திகதி மட்டக்களப்பு மாநகர சபைப்பிரதேச மான காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை மையவாடியில் இச்சிசுவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிசுவின் தாய் வைத்திய பரிசோதனைக்காகச் சென்றபோது அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்படவே மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி சிசுவின் தாயை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் குறித்த சடலத்தை தோண்டி எடுத்து  விசாரணைக்குட்படுத்துமாறு உத்தரவிடவே இன்று மாலை நீதிபதி முன்னிலையில இச்சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிகள் உயர் பொலிஸ் அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுண்டுள்ளனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: