13 Feb 2021

வரலாற்றில் முதல் தடவையாக கைதிகள் மூலமாக விதைக்கப்பட்ட விவசாய அறுவடை விழா

SHARE

வரலாற்றில் முதல் தடவையாக கைதிகள் மூலமாக விதைக்கப்பட்ட விவசாய அறுவடை விழா நிகழ்வு மட்டக்களப்பு திருப்பெருந்துரையில்  சனிக்கிழமை (13)  இடம்பெற்றது.

ஜனாதிபதியின் வழிகாட்டுதலுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையின் கைதிகளினால் சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறை திறந்த பண்னையில் 23 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறுபட்ட விவசாய உற்பத்திகள் செய்கைபண்ணப்பட்டு வரும் நிலையில் அதில் 10 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட மும்மாரி மழைக்காலபோக வேளாண்மை அறுவடை நிகழ்வு இதன் போது இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல். விஜயசேகர தலைமையில் இன்று அறுவடை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் மோகன்ராஜ் உள்ளிட்ட சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கைதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் அனுமதியுடன் தொடர்ந்தும் சிறைச்சாலைக்குச் சொந்தமான திருப்பெருந்துறை பண்னையில் அதிக பலன் தரும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் சுஜித் விஜய சேகர தெரிவித்ததுடன், அனைத்துவிதத்திலும் இச்செயற்பாட்டிற்கு உதவி புரிந்த அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.
















SHARE

Author: verified_user

0 Comments: