18 Feb 2021

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் செவ்வாய்கிழமை(16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவிஸ் நாட்டில் உள்ள ஒருவர் தமது கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பேசியதைக் கண்டித்தே அவர்கள் இவ்வாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவிஸ்லாந்திலே இருக்கின்ற ஒருவர் என்பவர் எமது பிரதேசத்தில் அமைந்துள்ள ஓந்தாச்சிமடம் கிராம உத்தியோகஸ்த்தருக்கு அவரது கடமையை அவதூறு செய்யும் வித்திலும், கடமையை இழிவு படுத்தும் வித்திலும், சமூக வலைத்தளத்தில் மிகவும் அவதூறு வார்த்தைகளைப் தெரிவித்திருக்கின்றார்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கமைவாகவும், சட்டத்திட்டத்திற்கமைவாகவும்தான் கடமையாற்றி வருகின்றோம். வெளிநாட்டிலிருக்கின்றவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய வகையிலும், அவர் கொடுக்கின்ற விடையங்களை உறுத்திப்படுத்தக்கூடிய வகையிலும், அவருக்கு தேவையான வகையில் அவருக்கு விசுவாசமாக நாங்கள் செயற்படவில்லை.

கொரோனா தாக்கம் மற்றும் ஏனைய இயற்கைத் தாக்கங்களுக்கு மத்தியிலும், பல இன்னல்களைச் சுமந்தவண்ணம் மிகவும் விசுவாகமாக கஷ்ற்றப்படடு கடமையாற்றி வருகின்ற கிராம உத்தியோகஸ்த்தர்களை, வெளிநாட்டில் மிகவும் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றவர் எமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.  இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இக்குறித்த நபருக்கு எதிராக சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதைக் கருத்திற் கொண்டு, எமது கிராம உத்தியோகஸ்த்தர்கள் எதிர்ப்புக் கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.

இக்கட்டான காலகட்டத்தில் கடமையாற்றிவரும் எமது சக உத்தியோகஸ்த்தர்களை வெளிநாட்டில் உல்லாசம் அனுபவித்து வருவர்கள் எந்தவொரு நேரத்திலும், எவராலும். ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எனவே கிராம உத்தியோகஸ்த்தர்களுக்கு பாதுகாப்பு இன்மையும், சொற்களினால் அவதூறான வார்த்தைகள் தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். ஒரு அரச உத்தியோகஸ்த்ரை அவர் விரும்பியவாறு கடமையாற்றுமாறு பணிப்பது குற்றமாகும், இதனை கிராம உத்தியோகஸ்த்தர்களாகிய நாங்கள் அவரை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்விடையம் தொடர்பில் எமது திணைக்களத் தலைவருக்கும், எமது ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர் சங்கத்திற்கும், தெரிவித்துள்ளதோடு, பொலிசிலும் முறைப்பாடு செய்துள்ளோம். இதுதொடர்பில் இரகசியப் பொலிசாரும் எம்மிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்என கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகஸ்த்தர்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களிடம் மகஜனர் ஒன்றையும் கையளித்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: