14 Feb 2021

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனுசரணையில் நவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

SHARE

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனுசரணையில் நவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட   மக்களுக்கான  உலர்வுணவு  பபதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில்  சனிக்கிழமை  (13)மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .  2020  ஆம் ஆண்டு  ஏற்பட்ட வெள்ளணர்த்தத்தின் போது அதிகளவில் பாதிக்கப்பட்ட  மட்டக்களப்பு  மாவட்ட   மக்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணையுடன் சர்வதேச  லயன் கழகத்தின் நிதி அனுசரணையில் உலர்வுணவு  பொதிகள் வழங்கப்பட்டு  வருகின்றன .

அந்தவகையில்  மட்டக்களப்பு நகர் பெண்கள் லயன்ஸ் கழகம், ஆரையம்பதி லயன்ஸ் கழகம்  மற்றும் நூற்றாண்டு நட்சத்திர  லயன்ஸ் கழகம்  ஆகியன இணைந்து அரச அனுசரணையுடனடன் மண்முனை வடக்கு பிரதேச  செயலக பிரிவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட  குடும்பங்கள்  தெரிவு  செய்யப்பட்டு  அவர்களுக்கான  உலர்வுணவு பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டன

தன் போது  குறித்த செயல் திட்டத்திற்காக செயல்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இ லயன்ஸ் கழக  உறுப்பினர்கள்  மற்றும்  நிகழ்வில் கலந்துகொண்ட   அதிகளுக்கும் நினைவு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட  306, ஆளுநர் லயன் கலாநிதி ரசிக  எஸ் . பிரியந்த  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர் .ஜெகதீஸ் வி .மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் உட்பட மட்டக்களப்பு நகர் பெண்கள் லயன்ஸ் கழகம், ஆரையம்பதி லயன்ஸ் கழகம் மற்றும் நூற்றாண்டு நட்சத்திர  லயன்ஸ் கழகங்களின்  அங்கத்தவர்கள் இபயனாளிகள் கலந்துகொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: