14 Jan 2021

வெள்ளைப் பேப்பரிலே என்னைக் கழுவி நீதிமன்றம் விடுதலை செய்திருக்கின்றது நான் யோசப் பரராசசிங்கத்தை கண்டது கிடையாது.- பிள்ளையான் தெரிவிப்பு.

SHARE

வெள்ளைப் பேப்பரிலே என்னைக் கழுவி நீதிமன்றம் விடுதலை செய்திருக்கின்றது நான் யோசப் பரராசசிங்கத்தை கண்டது கிடையாது.- பிள்ளையான் தெரிவிப்பு.

எமது மக்கள் எம்மை நம்ப வேண்டும், நான் மீண்டும், மீண்டும் சொன்னேன் வரலாறு என்னை விடுதலை செய்யும், நான் குற்றமற்றவன் எதுவித களங்கமும் அற்றவன், என்று. இன்று நான் நீதித்துறைக்கு நன்றி செலுத்துகின்றேன். நீதித்துறை இந்த வழக்கிலே பிள்ளையானுக்கு எதவித சம்மந்தமும் இல்லை என மிகத் தெழிவாகச் சொல்லியிருக்pன்றது. அழகான வெள்ளைப் பேப்பரிலே என்னைக் கழுவி விடுதலை செய்திருக்கின்றது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமா பிள்ளையான எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய்க கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசஙிகம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கில் இருந்து புதன்கிழமை (13) முழுமையாய விடுதலையான நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சியின் காரியாலயத்தில் வைத்து புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தை பிறந்தல் வழிபிற்ககும் என்பதுபோல் 2021 தை பிறந்ததோடு எனக்கும் எனது கட்சிக்கும் வழிபிறந்துள்ளது. புதன்கிழமை (13) மட்டக்களப்பு மேல் நீதி மன்றம் வழக்கிலிருந்து தீர்ப்பளித்திருக்கின்றது. 2015.10.11 அன்று கொழுப்பிலே சிஐடி இனரடயை இடத்திற்குச் செல்கின்றபோது அப்போது ஊடகங்களுக்குச் சொன்னேன் நல்லாட்சி அரசாங்கம் என்னைப் பழிவாங்க நினை;ககின்றது, யாருக்கெல்லாம் பாவிக்க முடியாத சட்டத்தை அப்பாவியாக அரசியல் செய்கின்ற எனக்கு, பாவிக்க முனைகின்றது என்பதைத் தெரிவித்திருந்தேன். பின்னரும், நான் கிட்டத்தட்ட 1869 நாட்கள் சிறைச்சாலைக்குள், வாடினேன். அனைவருக்கும் தெரியும், மழை, குளிர், மூட்டை, புழுதி, உள்ளிட்ட சொல்லமுடியாத துன்பங்கள் சிறைக்காலையில் உள்ளது. நான் முன்னான் முதலமைச்சராகவும். முhகாணசபை உறுப்பினராகவும் இருந்தபோது எனக்கு இவ்வாறு எனக்குச் செய்தார்கள். 2015 ஆம் ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தோடு சென்றவர்களுக்கு வழங்கிய பரிசாக இதனைச் செய்தார்கள்.

 நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டு கோளிற்கிணங்க மைத்திரிபால சிறிசேன அவர்கள் அவரது கையொப்பத்தை இட்டதன் காரமாக நான் சிறையில் வாடினேன். ஆனால் என்னை வரலாறு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த வழக்கிலே எனக்கு எதுவித சம்மந்தமும் இல்லை. யோசப் பரராசசிங்கம் என்பவரை நான் கண்டதே கிடையாது. ஒருமுறை முறக்கொட்டஞ் சேனையில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவரும் அங்கு நின்றிருந்தார் அக்போது நான் சுமார் 100 மீற்றருக்கு அப்பால் நின்று அவரைப் பார்த்ததுண்டு. அவருக்கு நான் வாக்களித்ததுமில்லை, அவரை அருகில் பார்த்ததும் கிடையாது. அவருடன் எதுவிதமான அரசியல் விரோதமும் எக்கில்லை.

 2005 ஆம் ஆண்டு யோசப்பரராசசிங்கம் மரணிக்கின்றபோது நான் அரசியல் செய்யவும் இல்லை, அரசியல் செய்ய வேண்டும் என்ற எதுவித எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை. 2008 ஆம் ஆண்டுதான் நான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதன் முதலில் போட்டிபோட்டேன். அப்போதுதான் எனது முதலாவது வாக்கைக்கூடச் செலுத்தினேன். அப்போதுகூட முன்னாள் அரசாங்க அதிபர் மௌனகுரசாமி அல்லது எமது கட்சியன் தலைவராக இருந்த மரணமடைந்த ரரு அவர்களை முதலமைச்சராக நிறுத்துவது என்ற அடிப்படையிலதான் நான் அப்போதும்கூட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தேன். இருந்தலும்கூட காலச் சூழல் என்னை கிழக்கில் முதலமைச்சராக்கியது.

அக்கிரமம் செய்து அரசியலுக்கு வரவேண்டும் என தேவைப்பாடு எமக்கிருக்கவில்லை. இருந்தாலும்கூட தமிழ் தேசிவாதிகள் என மக்களை உசுப்போற்றுகின்ற பொய்யான வேடதாரக்கூட்டம் என்னை கிழக்கிலே வளரவைத்தால் அவர்களது அரசியல் அழிந்துவிடும். ஆல்லது யாழ்ப்பாணத்திலே இருந்து வந்து இங்கு தேர்தல் கேட்க முடியாது என உறுதியாக நம்பியவர்கள், இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை இயற்றுவதற்கு உறுதுணையாக இரந்த பிதா மக்கள் அவர்களுடைய வாரிசுகளாக இருக்கின்றவர்களைப் நல்லட்சி அரசாங்கத்தை உருவாக்கி என்னை அடைத்தார்கள். நான் நீதித்துறையை நம்பி பலமுறை வாதாடினேன்.

மக்களின் பிரதிநிதியாக இருக்கின்றவர்களை அடைப்பதென்பது அந்த மக்களின் குரல்வளையை நசுக்குவதற்குச் சமன். 2005, 2006, ஆண்டுகளில் எத்தனையோ கொலைகள் இடம்பெற்றன. யோசப்பரராசசிங்கம்  2015 ஆம் ஆண்டு தேர்தலிலே தோல்வியடைந்திருந்தார். ஆனால் வெற்றிபெற்றவர்களை விடுதலைப் பலிகள் சுட்டுத்தள்ளிவிட்டு அவர்களுக்குரியவர்களை இந்த மாட்டத்தில நியமித்திருந்தர்கள். தமிழ் தேசியக் கூட்டமை;பபின் போட்டியிட்டு இறந்தவர்களுக்கு எதுவித விசாரணைகளுமில்லை. ராஜன் சத்தியமூரத்தி, கிங்ஸிலி இராஜநாயகம், உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டார்கள். இதுபற்றி யாரும் கதைப்பது கிடையாது. ஆனாலும் மானிப்பாயில் பிறந்தார், அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவரை மாத்திரம் முன்னுரிமைப் படுத்துகின்றார்கள்.

அப்போது நள்ளிரவு ஆராதனை நிகழ்வின்போது என்னை யாராவது கண்டார்களா? ஓன்றுமே இல்லை. எதுவித சாட்சியங்களும் இல்லாமல் என்னை அடைத்தார்கள். ஆனாலும் அரசியல் காழ்ப்புணச்சிக்காகவும், அல்லது ஊடகங்களில் பணி செய்பவர்கள் தங்களுடைய ஊடகங்களின் வளர்ச்சிக்காகவும், எமது கைத்திகளைப் பயன்படுத்தினார்களே தவிர நாம் அடிபட்டு, எமது உறவுகளும், கட்சித் தொண்டர்களும், வீதிகளிலே கண்ணீர் சிந்தி திரிந்தபோது எந்த ஊடகங்களும் எமக்கு உதவிசெய்யவில்லை.

பிள்ளையானுடைய தம்பியின மனைவி அடிக்கப்பட்டபோது எந்த பெண்ணியல் வாதியும் முன்வந்து குரல் கொடுக்கவில்லை. இவ்வாறு பல அசிங்கமாக செயல்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் நடாத்திக் காட்டியது. இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது ஊடகதர்மம், சமதர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழு; கைதிகளை தடுத்து வைக்கக்கூடாது, என குரல் கொடுக்கின்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் என்னை மாத்திரம் தண்டிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திலே இருக்கின்ற எம்.பிக்கள் குரல் கொடுக்கின்றார்கள். என்ன அடிப்படை தர்மம்.

நான் போராட்ட அமைப்பில் இணைந்துடிபோராடியது குற்றமா, ஏழை எழிய மக்களுக்கு பணி செய்வது குற்றமா? அல்லது வெறுத்தொதுக்கிய மாகாணசபையை மீளவும் நடைமுறைக்குக் கொண்டு வந்து பணிசெய்யத குற்றமா? கைக்கூலிகளைக் கொண்டுவந்து திட்டங்களை வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றுப்போய் கிடக்கின்ற அசிங்க நிலமையை யாழ்ப்பாணத்திலே பார்க்க முடியும்.

எமது மக்கள் எம்மை நம்பவேண்டும், நான் மீண்டும், மீண்டும் சொன்னேன் வரலாறு என்னை விடுதலை செய்யும், நான் குற்றமற்றவன் எதுவித களங்கமும் அற்றவன், என்று. இன்று நான் நீதித்துறைக்கு நன்றி செலுத்துகின்றேன். நீதித்துறை இந்த வழக்கிலே பிள்ளையானுக்கு எதவித சம்மந்தமும் இல்லை என மிகத் தெழிவாகச் சொல்லியிருக்pன்றது. அழகான வெள்ளைப் பேப்பரிலே என்னைக் கழுவி விடுதலை செய்திருக்கின்றது. என அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.




SHARE

Author: verified_user

0 Comments: