26 Jan 2021

மாடுகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நோய் தொடர்பில் பண்ணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்.

SHARE

மாடுகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நோய் தொடர்பில் பண்ணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்.

மாடுகளுக்கு (கால் நடைகளுக்கு) தற்போது ஏற்பட்டுள்ள தொற்று நோய் தொடர்பில் பண்ணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை கட்டடத்தில் திங்கட்கிழமை(25) இடம்பெற்றது.

சபையின் தவிசாளர் .எம்.நௌபர் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தின் போது தற்போது மாடுகளுக்குலம்பிஎனும்   தோல் நோய் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக  பிரதேச அரச கால் நடை வைத்திய அதிகாரி எஸ்.துஷ்யந்தன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகப்பிரிவில் இந்நோய் மாடுகளுக்கு இன்னும் ஏற்படவில்லை என்றாலும்  இது தொடர்பில் முன் எச்சரிக்கையுடன்  செயல்படுவது குறித்தும் வெளிப் பிரதேசங்களில் இருந்து மாடுகளை கொள்வனவு செய்கின்ற போது பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரியின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதன் அவசியம் குறித்து அங்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் தொடர்பிலும் இங்கு அதீத கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: