17 Jan 2021

குருமண்வெளியில் குடியிருப்புக்களில் தேங்கிநிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுங்கள்.

SHARE

குருமண்வெளியில் குடியிருப்புக்களில் தேங்கிநிற்கும் வெள்ளநீரை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக மக்கள் குடியிருக்கும் வீட்டு வளவுகளில் குளத்திலுள்ளது போல் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், பல நோய்த் தொற்றுக்குள்ளும், ஆளாகிவருவதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே இவ்வாறு தேங்கியுள்ள வெள்ளநீரை வெட்டி வெளியேற்ற உடன் நடவடிக்கை எக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமது கிராமத்தில் முறையான வடிகானமைப்பு வசதியின்மையாலும், வீதிக் கட்டமைப்புக்கள் அமைக்கப்படாமையாலும், தற்போது பெய்துள்ள அடைமழையில் கிராமத்திலுள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது ஓடமுடியாமல் தேங்கியுள்ளது. எனவே அதிகாரிகள் எமது கிராம மக்கள் மீது அதீத அக்கறை செலுத்தி தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற முன்வரவேண்டும் என அந்த அங்கலாய்க்கின்றனர்.

எமது கிராமத்தில் வெள்ளநீர் ஓடமுடியாமல் தேங்கியுள்ளதுதான் இதுபற்றி மக்கள் என்னிடம் முறையீடும் செய்தார்கள். அதற்கிணங்க நான் அனைத்து இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டதற்கிணங்க எமது பிரதேச சபை ஊழியர்கள் வந்து தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றுவதற்குரிய வழிவகைள் செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும், தாழ்வான இடங்களில்  நீர் தேங்கியுள்ளதனால் உயரமான இடங்களுடாக வழிந்தோடி ஆறு மற்றும், குளைத்தைச் சென்றடைவது கடினமான நிலமை ஏற்பட்டுள்ளது.

எமது பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலமை இருப்பதனால் ஒரே நேரத்தில் ஊழியர்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வேலை செய்வதனால் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை எமது சபை ஊழியர்களை எமது கிராமத்திற்கு வரவழைத்து இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே மிகவிரைவில் எமது பிரதேசசபையின் ஜே.சி.பி இயந்திரம் பழுதடைந்துள்ளது, தற்போது வேறு இடத்திலிருந்து வாடகைக்கு ஒரு ஜே.சி.பி. இயந்திரம் பெறப்பட்டுள்ளது அதனைக் கொணர்ந்து எமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெட்டி வெளியேற்ற நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் குருமண்வெளி வட்டார உறுப்பினர் இளங்கோ தெரிவித்தார்.

 


















SHARE

Author: verified_user

0 Comments: