5 Jan 2021

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் - இரா துரைரெட்னம் தெரிவிப்பு.

SHARE

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் - இரா துரைரெட்னம் தெரிவிப்பு.

மாகாணசபை முறைமை இலங்கை முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன மகாணசபை ஊடாக அதிக நன்மை பெற்றவர்கள் சிங்கள மக்கள் என்பதனை மறந்து இது தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட மகாணசபை முறைமை என்பதனை கைவிட்டு மிகவும் விரைவாக கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்னம் தெரிவித்தார்.

கிழக்கு ஊடகவிலாளர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார் மேலும் ஊடகஙடகளுக்கு கருத்து வெளியிடுகையில்......

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொடர்பான விடயங்களில் உலகளாவிய ரீதியில் புதிய கொரோனா விஸ்வரூபமெடுத்து அது தற்போது இலங்கையிலும் பரவி இருக்கின்றதா என்று  சந்தேககிக்கக்கூடிய அளவிற்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்றானது மாவட்டத்தில் அதிகரித்து செல்கின்றதே தவிர குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அரச திணைக்களங்களும் சுகாதார பிரிவினர்களும் ஏனையவர்களும் கூறிக் கொள்வதால் மக்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கைகளை சுயமாக மேற்கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றேன்.

பல வளங்கள், தேவைகள், அத்தியாவசிய விடயங்கள் மற்றும் ஆளணிகள் குறைந்த நிலையிலும்  சுகாதார திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் சுகாதார திணைக்களம் சுகாதார பிரிவினர் அணைவரும் சிறப்பான முறையில் இந்த சேவையை வழங்குவது மகிழ்ச்சியான விடயமாகும்.

அதற்காக பொதுமக்களுக்கான கூடுதலான ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்கள் இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சானது உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொரோனா தொடர்பான  செயல் வடிவங்களை ஊக்கப்படுத்துவதற்கும்  முன்னெடுப்பதற்கும் நிறுத்துவதற்கான செயல்வடிவங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அந்த விடயங்களை உடனடியாக பூர்த்தி செய்ய அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

13வது திருத்தச்சட்டத்தின் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை 30 வருடத்திற்கு மேலாக செயற்பட்டு தற்போது அதனை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு புதிய நிபுனர் குழுக்களை அமைத்து தேர்தல் நடத்த முடியுமா இல்லையா என்பதனை பரிசோதிப்பதற்காக ஆலோசனை கூறுவதற்காக குழுக்களை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளதாக அறியக்கூடியதாயுள்ளது.

மாகாணசபை முறைமைகளை பொறுத்தவரையில் ஒரு நிறுவாகம் மக்களுடைய காலடிக்கு விரைவாக கொண்டு செல்வதற்கும் மக்களுக்கான தேவைகளையும் உரிமைகளையும் உடனடியாக அமுல்படுத்தக்கூடியவாறு மாகாணசபை முறைமை கடந்த காலங்கலில் அழுல்ப்படுத்தப்பட்டதை எவராலும் மறுக்க முடியாது.

இந்த மாகாணசபை முறைமைகளை இனரீதியாகவோ மாகாணசபை என்றால் ஒரு தனி நாடாக போய்விடும் என்கின்ற சந்தேக கண்ணோடு பார்ப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் மாகாணசபை முறைமை என்பது மக்களுக்கு அதிகாரங்களை காலடிக்கு கொண்டுசெல்லக்கூடிய ஒரு வழிமுறை இது தேசிய நலன்களை பாதுகாக்கக்கூடியவாறு செயல்வடிவங்கள் இருக்கும் என்பதை மறந்துவிடலாகாது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 40 வீதம் தமிழ் மக்கள் 37 வீதம் முஸ்லீம் மக்கள் 23 வீதம் சிங்கள மக்கள் இருப்பதன் காரணமாக கூடுதலாக தமிழர்கள் இருப்பதால் அதிக ஆசணங்களை தமிழர்கள் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது அதனால் அதிகாரத்தை கேட்கின்ற தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு ஒரு சின்னத்தில் போட்டியிடுவதன் ஊடாக 15க்கு மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்களாக தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

எனவே அவ்வாறு பெறும் பட்சத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் வருவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கட்சிகள் ஓரணியில் திரண்டு போட்டியிட்டு தமிழர் ஒருவரை முதலமைச்சரை கொண்டுவருவதற்குறிய செயல்வடிவங்களில் இறங்க வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றேன்.

 இலங்கையை பொறுத்தவரை உலகலாவிய ரீதியில் கொரோனா தொடர்பான விடயம் என்பது உலகமயமாக்கப்பட்ட ஒரு விடயமாகும் இதில் கொரோனாவால் இறப்பவர்களை  எரிப்பதுதான் சுத்தமான செயற்பாடாகும் நோயினை தடுப்பதற்கான வழிமுறையாகும் ஆனால் முஸ்லீம் சமுகத்தை பொறுத்தமட்டில் தங்களது சமுகம் சார்ந்தவர்கள் இறந்தால் எரிப்பதில்லை அவர்கள் அடக்கம் செய்வார்கள் இது அவர்களது மதம் சார்ந்த செயற்பாடு இலங்கை அரசை பொறுத்தமட்டில்  அந்த சமுகம் சார்ந்த விடயங்களையும் கருத்திற்கொண்டு தொற்றுநோயக்கிருமிகள் ஏனையோருக்கு பரவாமல் எரிக்கும் முறையை கவனத்தில் எடுத்து இலங்கை அரசு அவர்களுடன் கலந்தாலோசித்து தொற்று பரவாமல் இருப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.



 

 

SHARE

Author: verified_user

0 Comments: