5 Jan 2021

மட்டு நகரம் சில தினங்களாக வெறிச்சோடிகானப்படுகின்றது.

SHARE

மட்டு நகரம் சில தினங்களாக வெறிச்சோடிகானப்படுகின்றது.    
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் எதிர்வரும் 15ம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மாவட்ட கொரோனா செயலணியின் தீர்மாணங்களுக்கு அமைவகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

விசேடமாக கடந்தவாரம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக 25 மாவட்டங்களுக்கும் கொரோனா செயலணிக்காக 25 இரானுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேஜர் ஜெனரல் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரீசோதனையின் படி 59 தெற்றாளர்கள் அடையாளம் கானப்பட்டதை தொடர்ந்து மேலும் ரபிட் அன்டிஜன் பரீசோதனைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஆலோசனையின் படி 15ம் திகதி வரை முடக்கவேண்டியது  கட்டாயம் என தீர்மாணிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரத்தின் அதிகளவான வர்தக நிலையங்கள் காத்தான்குடி முடக்கப்பட்ட பிரதேசங்களை சார்தவர்களுடையதாகும் ஆகையால் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாது வெறிச்சோடிகானப்படுகின்றது.  








SHARE

Author: verified_user

0 Comments: