20 Jan 2021

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு.

SHARE

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு.

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கியதோடு மனித உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்கள் அடங்கிய பதாதைகளும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளின் அதிபர்களிடமும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ஜீவரெத்தினம் தவேஸ்வரன் அவர்களினால் புதன்கிழமை (20) கையளிக்கப்பட்டது.

மன்முனை தென்மேற்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கான பதாதைகள் மன்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.உதயகுமாரன் தலைமையில் முதலைக்குடா மகா வித்தியாலயத்திலும் மன்முனை மேற்கு கோட்டமட்ட பாடசாலைகளுக்கான பதாதைகள் மன்முனை மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.முருகேசப்பிள்ளை தலைமையில் குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்திலும் ஏறாவூர்பற்று கோட்டமட்ட பாடசாலைகளுக்கான பதாதைகள் ஏறாவூர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.ஜெயகுமணன் தலைமையில் கரடியனாறு மகா வித்தியாலயத்திலும் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை கா.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் அத்தியாவசியமாக துவிச்சக்கர வண்டி தேவையுடைய இரண்டு மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று அத்தியாவசியமாக துவிச்சக்கர வண்டி தேவையுடைய மாணவர்கள் இருவருக்குமாக நான்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மன்முனை மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கணகடூசூரியம் அவர்களும் மன்முனை மேற்கு வலயக்கல்வி பிரிவில் உள்ள 36 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் வடக்கு கிழக்கு மலையக பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.















SHARE

Author: verified_user

0 Comments: