4 Jan 2021

காத்தான்குடி பிரதேசம் செயலாளர் பிரிவு தொடர்ந்தும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்படும் அரசாங்க அதிபர்.

SHARE

காத்தான்குடி பிரதேசம் செயலாளர் பிரிவு தொடர்ந்தும் எதிர்வரும்  15 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்படும் அரசாங்க அதிபர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசம் செயலாளர் பிரிவிலுள்ள பகுதிகள் தொடர்ந்தும் எதிர்வரும்  15 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு அறிவித்தார்

கடந்த 30 ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையில் 59 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து அவசரமாக மாவட்ட கொரோனா செயலணியைக் கூட்டி அந்த பகுதி 5 ஆம் திகதிவரை 5 தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு முடக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் செயலாளரால் மாவட்டத்திற்காக 25 மாவட்டத்திற்கு கொரோனா செயலணிக்காக  25 இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  மேஜர் ஜெனரல் ரணசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலணிக் குழுவை கூட்டி அதில் கலந்து கொண்டார். இதில் காத்தான்குடி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது இதன்படி காத்தான்குடியில் தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற அன்டிஜன் பரிசோதனையில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் 5 தினங்கள் முடக்கப்பட்ட அந்த பகுதி மேலும் 15 ஆம் திகதி வரை நீடிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

எனவே எதிர்வரும் 15 ஆம் திகதிவரை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: