3 Jan 2021

தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியில் 147 பேரிடம் அண்டிஜன் கொவிட் பரிசேதனை 7 பேருக்கு தொற்று உறுதி.

SHARE


தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியில் 147 பேரிடம்  அண்டிஜன் கொவிட் பரிசேதனை 7 பேருக்கு தொற்று உறுதி.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு காத்தான்குடியில்  அண்டிஜன் கொவிட் 19 பரிசோதனைகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய காத்தான்குடி பரீட் நகர் பள்ளிவாயல் வளாகத்தில் இந்த பரிசோதனைகள் சனிக்கிழமை (02) நடவடிக்கை இடம் பெற்றது.

மட்டக்களப்பு தொற்று நோயியல் வைத்திய அதிகாரி டாக்டர் வே.குணராஜசேகரம், அவர்களின் வழிகாட்டலில் காத்தான்குடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் இந்த அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 147 பேருக்கு மேற் கொண்ட அண்டிஜன் பரிசோதனையின் போது 7 பேருக்கு தொற்று உறதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே தொற்றாளர்களாக என அடையாளப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அண்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்ப்பட்டவர்களாகும் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இன்று தொற்றாளர்களாக உறுதிப்படுதிப் படுத்தப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் எனவும் குறிப்பிட்டனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரிவு ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் துரிதாக அண்டிஜன் கொவிட் பரிசேதனைகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த அன்டிஜன் பரிசோதனைக்காக போது மக்கள் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் காணமுடிந்தது.








SHARE

Author: verified_user

0 Comments: