1 Dec 2020

மட்டக்களப்பு ஆயித்தியமலை அரச அரசி ஆலையினை உடனடியாக செயற்படவைக்க அரசாங்க அதிபர் கருணாகரன் நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பு ஆயித்தியமலை அரச அரிசி ஆலையினை உடனடியாக செயற்படவைக்க  அரசாங்க அதிபர் கருணாகரன் நடவடிக்கை.மட்டக்களப்பு ஆயித்தியமலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆலையினை இம்முறை அறுவடை செய்யப்படும் பெரும்போக நெல்லைக் கொண்டு செயற்பட வைக்க மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உன்னிச்சைக் குளத்தின் நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் அறுவடைகளுக்கு சந்தை வாய்ப்பினயும், அப்பகுதி மக்களின் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவின் ஆயித்திய மலைப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச அரிசி ஆலையினை பார்வையிடும் அரசாங்க அதிபரின் களவிஜயம் செவ்வாய்கிழமை (01) இடம்பெற்றது. 

இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெல் அறுவடையினைக் கொண்டு இவ்வரிசி ஆலையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு  அரசாங்க அதிபர் கருணாகரன் சம்மந்மப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இக்களவிஜயத்தின்போது மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவனீதன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், மண்முனை மேற்கு வவுனதீவு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மண்முனை மேற்கு பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேஸ். மாவட்ட தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

சுமார் 65 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட் இவ்வரிசி ஆலையானது அமைக்கப்பட்ட நோக்கத்திற்கமைவாக கூட்டுறவு அமைப்பினூடாக செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 










SHARE

Author: verified_user

0 Comments: