8 Dec 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்காக முந்தனை ஆற்றுப்படுக்கைத்திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கான சாத்தியவளம் ஆராய்வு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்காக முந்தனை ஆற்றுப்படுக்கைத்திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கான சாத்தியவளம் ஆராய்வு.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுகின்ற வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்காக நீர்முகாமைத்துவத்தினை மேற்கொண்டு அவ்வெள்ள நீரினை வேறு தேவைகளுக்க்குப் பயன்படுத்துவதற்கான புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களை இணைத்ததான முந்தனை ஆறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

இம்மாவட்டத்தில் வெள்ள அபாயத்தினைக் குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (4) கல்லடி ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது. 

இதன்போது வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கவனிக்கப்படவேண்டிய பொருளாதாரம், சூழல், வாழ்வாதாரம், சமுகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரதான விடயங்களும் அவற்றுக்கிடையிலான உபவிடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு தொழிநுட்பப் பிரிவினருக்கும் சம்மந்தப்பட்ட திணைக்கள பங்குதாரர்களுக்குமிடையே கருத்துக் பரிமாறப்பட்டன.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு வாவி கடலுடன் கலக்கும் கல்லாறு மற்றும் டச்பார் முகத்துவாரங்களின் அபிவிருத்தி;, சந்திவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள புதிய கால்வாய், கிரானில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம், சித்தாண்டி மற்றம் ஏ-5 தொடக்கம் ஏ- 15 பிரதான பாதைகளிலும், தாழ்நிலப்பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள நீர் அணை மதில்கள் மற்றும் மகிழவட்டவான் நீர்த்தேக்கம் என்பன இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதுதவிர உன்னிச்சை அணைக்கட்டினை உயர்த்துதல், தோணாக்கள் புனரமைத்தல், லாவன்யா நீர்த்தேக்கம் மற்றும் கொடபத்தடமன நீர்த்தேக்கம் அமைத்தல் போன்ற திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இத்தெளிவூட்டும் நிகழ்வில் நீர்ப்பாசன திணைக்கள பொறியிலாளர் என். நாகலிங்கம், ஈஜிஸ் இன்டநெசனல் நிறுவனத்தின் நாட்டிற்கான இயக்குனர் பொறியியலாளர் எஸ். ஜயசோதி, விவசாயம், வீதி அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி, வன பரிபாலனை உட்பட பல திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: