24 Dec 2020

பாடசாலைகள்தான் நல்லினக்கத்தினையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம் - மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவிப்பு.

SHARE

பாடசாலைகள்தான் நல்லினக்கத்தினையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம் - மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவிப்பு.

பாடசாலைகள்தான் நல்லினக்கத்தினையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம், மாணவர்கள் பிற சமயங்களை அறிந்து அதுதொடர்பாக கருத்தாடல் செய்வது சமய நல்லினக்கத்திற்கு ஒரு நல்ல சகுனம் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவித்தார். 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் “ஒழுக்க விழுமியங்களை பாதுகாப்பதில் சமயங்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் பல்சமய கருத்தாடல் நிகழ்வொன்று வியாழக்கிழமை(24) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் இவ்வாறு தெரிவித்தார். 

சமயங்களுக்கிடையில் புரிந்துனர்வினையும், சமாதானத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் வரிசையில் இக்கருத்தாடல் நிகழ்வு அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலில் இம்முறை தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்டது. இதன்போது மட்.வின்சன் மகளிர் உயர்தரப்பாடசலை சார்பாக பருனி நவரட்னராஜா, மட்.மெதடிஸ் மத்திய கல்லூரி சார்பாக யுவராஜ் பிரதாபன்,  காத்தான்குடி மத்திய கல்லூரி சார்பாக எம்.ஜே.எம். சாபிர், மற்றும் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம் சார்பாக எம்.எஸ். ஹைபா மற்றும் எம். பாதிமா மொனா சுஆத் ஆகிய மாணவ மாவிகள் பங்கு பற்றினர். 

இம்மாணவர்கள் தமது சமயத் தவிர்ந்த பிற சமயங்கள் கூறும் ஒழுக்க விழுமியங்கள் பற்றி கருத்தாடல் செய்தனர். இதன்போது இம்மாணவர்களுக்கான கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன் சமயத் தலைவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

இதுதவிர தொலஸ் மகே பகண எனும் 12மாத விளக்கு நிகழ்சிசத்திட்டத்தின் கீழ் “புத்தகம் வாசிப்போம்” எனும் தொனிப் பொருளில் தாளங்குடா பொது நூலகத்திற்கு ஒரு தொகைப் புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் காணிப்பிரிவிற்கான மேலதி அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மோகன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ. ஜெய்னுலாப்தீன் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர். 









SHARE

Author: verified_user

0 Comments: