17 Dec 2020

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த ஆண்டில் அமுல்

SHARE

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த ஆண்டில் அமுல்.அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.


இதற்கமைவாக எதிர்வரும் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் புதிய திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கிழக்கு மாகாண ஆளனர் அனுராதா யகம்பத் தலைமையில் புதன்கிழமை (16) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வனிகசிங்க மட்;டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக உட்பட கிழக்குமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அமுல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பான சம்மந்தப்பட்ட துறைசார் நிபுனர்கள், அனைத்து திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தினை வளர்த்தெடுக்கும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வளங்களையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி மக்களினதும் மாகாணத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் புதிய திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயாப்பட்டது.

குழங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை, கற்றொழில், நன்னீர் மீன்வளர்ப்பு, சிறு கைத்தொழில், ஆடைஉற்பத்தி மற்றும் சுற்றளாதுறை  அபிவிருத்தி போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

இத்திட்டங்களினூடாக கிழக்கு மாகாணத்தினை நாட்டின் சிறந்த முதல்தர மாகாணமாக கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: