30 Dec 2020

திருக்கேதீச்சரப் புத்த பிக்குவை வன்மையாகக் கண்டிக்கிறேன் - சிவ சேனை அமைப்பின் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.

SHARE

 


திருக்கேதீச்சரப் புத்த பிக்குவை வன்மையாகக் கண்டிக்கிறேன் - சிவ சேனை அமைப்பின் மறவன்புலவு க.சச்சிதானந்தன். 

திருக்கேதீச்சரப் புத்த பிக்குவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் புதன்கிழமை (30)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்தாவது…

இலங்கை சிவபூமி. இந்தத் தீவெங்குமுள்ள மண்ணில் சத்தியும் சிவமும் மணக்கும்.

சேவ்வாய்கிழமை (29) திருக்கேதீச்சரத் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை புத்த பிக்கு ஒருவர் கைப்பற்ற முயல்கிறார் என்று செய்தி படித்ததும் சைவ மக்கள் வேதனையில் விம்மினர்.

1 புத்தர் வந்த காலத்திலிருந்தே சிவபூமியைப் புத்த பூமியாக்கும் முயற்சியில் புத்தர் உடை அணிந்தோர்.

2 போர்த்துக்கேயர் வந்த காலத்திலிருந்து சிவ பூமியைக் கிறித்தவ பூமி ஆக்கும் முயற்சியில் மேலை நாட்டு அடிவருடிகள்.

3 கடந்த 100 ஆண்டுகளாக சிவ பூமியை முகமதிய பூமியாக்க விழையும் ஜிகாதிகள்.

66,000 சகிமீ பரப்பும் சிவபூமியாக இருந்த மண். இன்றைக்கு 20,000 சகிமீ பரப்பளவுமே சிவபூமியாக இல்லை என்பதற்குப் புத்தரும் கிறித்தவரும் முகமதியரும் காரணம்.

மொத்த மக்கள் தொகையே சைவர்களாக இருந்த மண்ணில்,

நூறு ஆண்டுகளுக்கு முன்பு 25வீதம் சைவர்களாக இருந்த மண்ணில், இன்றைக்கு 12.36வீதம் சைவர்களே வாழ்வதற்கு புத்தரும் கிறித்தவரும் முகமதியரும் காரணர்.

அயலவர் ஆக இருந்து கொண்டே சைவர்களின் நிலப்பரப்பைக் குறைக்கிறீர்கள். மக்கள்தொகையைக் குறைக்கிறீர்கள். சைவர்கள் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

திருக்கேதீச்சரத்தில் தீவிரவாதப் புத்தபிக்கு ஒருவர் சைவத் திருக்கோயில் காணியைக் கைப்பற்ற முயல்வது ஒருவகையில் 1958 இல் பாணந்துறையில் நிகழ்ந்ததை ஒத்த சமயப் பயங்கரவாதமே. 

பாணந்துறையில் முருகன் கோயில் கொடி மரத்துக்கு அருகே சைவக் குருக்களை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு கொளுத்திய நிகழ்வே சைவர் திருப்பி அடிக்க வன்முறை விதையானது.

தீவிரவாதப் புத்த பிக்குகள் அவிழ்த்துவிடும் சமயப் பயங்கரவாதம் மீண்டும் இந்த மண்ணில் போர் மேகங்களைக் குவிக்கும்; உள்நாட்டுக் கலகங்களை ஊக்குவிக்கும்; அமைதியைக் கெடுக்கும் வளர்ச்சியைக் குலைக்கும்; மனிதத்தைப் புதைக்கும்.

அறம் அருள் அன்பு இரக்கம் எனப் புத்தரின் போதனைகளை ஆன்மீக வளர்ச்சிச் சாதனைகளாக்க விரும்பும் புத்தர்கள் முன்வந்து தீவிரவாதப் புத்தர்களை அடக்காவிட்டால் இந்த நாட்டில் இந்த மண்ணில் மீண்டும் தலைதூக்க உள்ள வன்முறைகளுக்கு புத்தரே பொறுப்பாவார்.


திருக்கேதீச்சரத் திருக்கோயில் காணியை அடாத்தாகக் கைப்பற்ற முயன்ற புத்த பிக்குவின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: