1 Dec 2020

மதத் தலைவர்களின் பங்களிப்பில் இலங்கைக்கான அரசியலமைப்பில் பன்மைத்துவக் கருத்துக்களை உள்ளடக்குவதற்கான திட்ட முன்மொழிவை உருவதக்கும் தேசிய சர்வமத மாநாடு.

SHARE

மதத் தலைவர்களின் பங்களிப்பில் இலங்கைக்கான அரசியலமைப்பில் பன்மைத்துவக் கருத்துக்களை உள்ளடக்குவதற்கான திட்ட முன்மொழிவை உருவதக்கும் தேசிய சர்வமத மாநாடு.

மதத் தலைவர்களின் பங்களிப்பில் இலங்கைக்கான அரசியலமைப்பில் பன்மைத்துவக் கருத்துக்களை உள்ளடக்குவதற்கான திட்ட முன்மொழிவை உருவதக்கும் தேசிய சர்வமத மாநாடு. மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் செவ்வாய்கிழமை (01) இடம்பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ.மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்த்தவம், மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சூம் தொழில் நுட்பத்தின் மூலம் கொழும்பிலிருந்து தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்னவின் ஒழுங்கமைப்பில் பல வளவாளர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை எடுத்துரைத்தனர்.

அந்த வகையில் கொழும்பிலிருந்து சூம் தொழில் நுட்பத்தினூடாக தேசிய சமாதானப் பேரவையின நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா பன்மைவாதம் தொடர்பிலும், தெற்காசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சசங்க பெரேரா இலங்கையில் சமூக வரலாற்று ரீதியான பன்மை வாதத்தின் அனுபவம் தொடர்பிலும், கனடாவில் பின்பற்றப்படும் பன்மைத்துவ எடுத்துக்காட்டுக்கள் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்ததானிகர் டேவிட் மேக்கின்னன் அவர்களும், தற்போதைய மற்றும் கடந்தகால இலங்கை அரசியலமைப்புக்களின் பன்மைக் கூறுகள் தொடர்பில் சட்டத்தரனி ஜெகத் லியனாராச்சி அவர்களும், விளக்கங்களை வழங்கினர். 

இறுதியில் இலங்கைக்கான உத்தேச புதிய அரசியலமைப்பில் பன்மை விதிகளை சேர்ப்பது தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 















SHARE

Author: verified_user

0 Comments: