1 Dec 2020

புரவி சூறாவளி கிழக்கில் கடும் காற்று மீன்டிபிடி நடவடிக்கைககள் முற்றாக ஸ்தம்பதம்.

SHARE

புரவி சூறாவளி கிழக்கில் கடும் காற்று மீன்டிபிடி நடவடிக்கைககள் முற்றாக ஸ்தம்பதம்.

புரவி சூறாவளி அச்ச நிலமை  கிழக்கில் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று வீசி வருகின்றது. கடல் கடும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.

புரவி சூறாவளி செவ்வாய்கிழமை கிழக்கைக் கடந்து செல்லும் என்ற வானிலை அவதான நிலையத்தின் முன்னறிவத்தலையடுத்து கிழக்கு மாகாணத்தில் மீனவர்கள் மீன்டிபிடிக்கக் கடலுக்குச் செல்லாமையால் கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன.

கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று வீசிவருவதால் மீன்பிடிக் கலங்களை மீனவர்கள் தூர இடங்களில் நிறுத்தியுள்ளனர். சில இடங்களில மீன்வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.

மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென தொடர்ந்தும் வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.















SHARE

Author: verified_user

0 Comments: