30 Dec 2020

மினி சூறாவளியினால் 65 வீடுகள் பகுதியளவில் சேதம்.

SHARE

மினி சூறாவளியினால் 65 வீடுகள் பகுதியளவில் சேதம்.

மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட சந்திவெளி பாலையடித்தோனா கிராமத்தில் உள்ள 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் தெரிவித்தார்.

 
சேதமடைந்துள்ள வீடுகளை முழுமையாக புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை பெற்று நட்ட ஈட்டினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மிகவும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

நட்புறவு கிராமத்தில் கடந்த 28 ஆம் திகதி பெய்த கடும் சுழிக் காற்றுடன் கூடிய மழை இரவு 9 மணி முதல் 15 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வீசியதன் காரணமாக பகுதியளவில் 65 வீடுகள் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிலும் கோரளைப்பற்று பிரதேச செயலகபிரிவின் கும்புறுமுலை கிராமத்தில் 2 வீடுகளும் சேதமடைந்து உள்ளன.

சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈடு வழங்கும் நடவடிக்கையில் மாவட்ட செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து பிரதேச செயலகங்களுக்கு வழங்க உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: