15 Dec 2020

காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புனர்வு வேலைத்திட்டம் -28 குழுக்கள் சோதனை நடவடிக்கையில்.

SHARE

காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புனர்வு வேலைத்திட்டம் -28 குழுக்கள் சோதனை நடவடிக்கையில்.


ட்டக்களப்பு காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புனர்வு வேலைத்திட்டம் செவ்வாய்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டது. 

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை (11) காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக் அமைவாக இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புனர்வு வேலைத்திட்டம் மேற் கொள்ளப்பட்டன. 

இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிரம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சமூக மேம்பாட்டு;க்கான மக்கள் ஒன்றியத்தின் தொண்டர்கள் பொலிசார், காத்தான்குடி பிரதேச செயலக அதிகரிகள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதி நிதிகள் வீடு வீடாகச் சென்று வீடுகள் சுற்றுப்புறச் சூழல் வீட்டுக்கிணறு என்பவற்றை பார்வையிட்டதுடன் டெங்கு பரவக் கூடிய இடங்கள் துப்பரவு செய்யப்படாத இடங்களை அடையாளம் கண்டு உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி டெங்கு தொடர்பான விழிப்பூட்டலையும் மேற் கொண்டனர். 

இதன் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி ஹிழுறியா வட்டாரத்தின் ஊர்வீதியில் நடைபெற்றது. நடைபெற்றது.

 இந்த ஆரம்ப வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர், காத்;தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன், காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பசீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு மேற் கொள்ளப்படவுள்ளன. 

காத்தான்குடியில் கடந்த 27.11.2020 தொடக்கம் 09.12.2020 வரையான காலப்பகுதியில் 30 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் காத்தான்குடி 3ஆம் குறிச்சி மேற்குப்பகுதியிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: