10 Dec 2020

புரவி புயல் சீரற்ற காலநிலையினால் மட்டு.மாவட்டத்தில் 2467ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிந்து நாசம் 846 விவசாயிகள் பாதிப்பு.

SHARE

புரவி புயல் சீரற்ற காலநிலையினால் மட்டு.மாவட்டத்தில் 2467ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அழிந்து நாசம் 846 விவசாயிகள் பாதிப்பு.

புரவி புயல் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2467  ஏக்கர் பெரும்போக நெற்செய்கை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள் உதவி பணிப்பார் எம்.ஜெகந்நாதன் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 846 விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் வவுணதீவு, வாகரை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி கிரான், செங்கலடி, ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகமான நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன. மாவட்டத்திலுள்ள 18 பெரும்பாக உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வயல் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

தொடர்ந்து வேளாண்மை செய்கைக்குள் அதிகளவிலான நீர் தேங்கியுள்ளது.இதனால் பயிர்கள் அழகிவருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: