22 Dec 2020

கோறளைபற்று பிரதேச செயலக பிரிவில் 16 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் நீரினால் மூழ்கிய நிலையில்.

SHARE

கோறளைபற்று பிரதேச செயலக பிரிவில் 16 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் நீரினால் மூழ்கிய நிலையில்.

மட்டக்களப்பில் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடும் பணிகளில் அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் அனர்த்த முகாமைத்து நிலையத்தின் உத்தியோகத்துருடன் கிரான் பிரதேச செயலாளர் சு.ராஜ்பாவு மற்றும் இராஜாங்க அமச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் அவர்களின் குழுவினரும் இணைந்து பார்வையிட்டுள்ளனர்.

மக்களுக்கான நிவாரணப்பணிகள் அவசியமான இடத்து உடணடியாக செயல்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கை குழு தயாராகவுள்ளதாக இராஜாங்க அமச்சர் குறிப்பிட்டார்.

கிரான் கொறளைபற்று தெற்கு பிரதேசம் தற்போது துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் போக்குவரத்திற்கு கடற்படையினரின் இயந்திரப்படகுகளும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயந்திப்படகுகளும் சேவையில் உள்ளது.

கோறளைபற்று தெற்கு பிரதேசசெயலக பிரிவுகளில் 6 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த கோராவெளி, குடும்பிமலை, பேரிலாவெளி, மியாங்கற்குளம், புலிபாய்ந்தகல், பொண்டுகற்சேணை, பூலாக்காடு, முறுத்தாணை, பிரம்படித்தீவு, போன்ற 16 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.











SHARE

Author: verified_user

0 Comments: